சைவர்களால் 'புறச் சந்தான குரவர்கள்' எனப் போற்றப்படும் நால்வருள் முதன்மையானவர் மெய்க்கண்ட தேவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதான சிவஞான போதத்தை இயற்றியவர் இவரே.
மெய்க்கண்ட தேவர், திருவெண்ணெய்நல்லூரில், வேளாண் குடியில் பிறந்தவர். கிபி 13 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் பரஞ்சோதி முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைத் தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்களுள் அருணந்தி சிவாச்சாரியார் தலை சிறந்தவர். இவர் தனது குருவின் சிவஞான போதத்தை அடியொற்றிச் சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு நூல்களை இயற்றினார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான மனவாசகம் கடந்தார் என்பவர் உண்மை விளக்கம்என்னும் சித்தாந்த நூலை இயற்றினார்.
விரிவாகக் காண்க:
மெய்க்கண்ட தேவர்
மெய்க்கண்ட சாத்திரங்கள்
சந்தானக்குரவர்கள்
சிவஞானபோதம்
விரிவாகக் காண்க:
மெய்க்கண்ட தேவர்
மெய்க்கண்ட சாத்திரங்கள்
சந்தானக்குரவர்கள்
சிவஞானபோதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக