நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.

இத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.

இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

நமது பயணம் என்றும் தொடரும்

தேசிய சிந்தனை

தேசமே தெய்வம் (புதிய தளம்)
13.11.10

திருச்சங்கின் அவதாரம்

பொய்கையாழ்வார்

திருநட்சத்திரம்:
ஐப்பசி 27 - திருவோணம் (நவ. 13)


பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது. முதன்முதலில் விட்டுணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர். பொய்கையாழ்வார்  காஞ்சிபுரத்திலும் பூதத்தாழ்வார் கடல்மல்லையிலும் பேயாழ்வார் மயிலையிலும் ஒவ்வொருநாள் இடைவெளியில் அவதரித்தவர்கள்.
.

.சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகின்றது. இதன்படி பொய்கையாழ்வார்  பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கின் அம்சம் கொண்டவர் என்கின்றனர். இவர் பொது யுகம் (கி.பி) 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.


நன்றி: தமிழ் உலகம்

காண்க:
பொய்கையாழ்வார்
பொய்கையாழ்வார் சரிதம்
முதல் திருவந்தாதி
தேசிகன் பக்கம்
ஆழ்வார்கள்
முதல் ஆழ்வார் மூவர்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக