நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

19.11.10

சமயோசிதமான தலைவி
இந்திரா காந்தி
(பிறந்த நாள்: நவ. 19, 1917)

இந்திரா காந்தி குறித்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே கூறிய சம்பவம்:

இந்திரா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் ஒரு போராளியாகவே இருந்தார். ஒருமுறை ஒரிசாவில் ஒரு கலவரக்காரன் இந்திராவின் மீது கல்லை எறிந்து அவர் முக்கை உடைத்துவிட்டான். அவரை `பாண்டேஜ்’ போட்ட முக்குடன் பார்த்த நான், “நீங்கள் உங்களின் நீளமான முக்கை எல்லோருடைய விஷயங்களிலும் நுழைத்தால் இன்னும் நிறைய காயப்பட வேண்டி வரும்” என்று நகைச்சுவையாகக் கூறினேன். அதற்கு பதிலடியாக இந்திரா சொன்னார்: “எனது நீண்ட முக்கைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அது நீளமானது என்பதால் என்னால் தொலைவில் நடப்பதைக் கூட மோப்பம் பிடிக்க முடியும்! என்றார். இந்த சமயோசிதம் என்னைக் கவர்ந்தது.
காண்க (முந்தைய சுட்டி):
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக