நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

4.1.11

முருகனின் தமிழ் அடியவர்


பாம்பன் சுவாமிகள் 

திருநட்சத்திரம்:
மார்கழி - 20 - பூராடம்

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் தமிழ்நாட்டில் ராமேசுவரம் தீவில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்தவர் (1850, மார்கழி - பூராட  நட்சத்திரம்). இவர்  வடமொழி, தமிழ் இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார்.ஆறுமுகப் பெருமானின் வழிபாடாக இவர் இயற்றியப் பாடல்கள் 6,666; இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை - திருவான்மியூரில் உள்ளது.


காண்க:
பாம்பன் சுவாமிகள் சரிதம் (விக்கி)
பாம்பனார் பணிமன்றம்
பாம்பன் சுவாமிகள் வரலாறு
பாம்பன் சுவாமிகள் படைப்புகள்
பாம்பன் சுவாமிகள் (தமிழ் ஹிந்து)
பாம்பன் சுவாமிகள் - 2 (தமிழ் ஹிந்து)
பாம்பன் சுவாமிகள் வாழ்வும் வாக்கும்
சண்முக கவசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக