நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.

இத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.

இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

நமது பயணம் என்றும் தொடரும்

தேசிய சிந்தனை

தேசமே தெய்வம் (புதிய தளம்)
17.1.11

தமிழைக் காக்க மடம் நிறுவியவர்

 நமச்சிவாய தேசிகர் 
குருபூஜை : தை 3 (ஜன. 17 )

தமிழும் சைவமும் இணைபிரியாதவை. சைவமும் சைவ சித்தாந்தமும் வளர்க்க, 600 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாவடுதுறையில் சைவ மடம் நிறுவிய பெருந்தகை தவத்திரு நமச்சிவாய தேசிகர். அன்னாரது அடியொற்றி, இன்றும் தமிழும் சைவமும் வளர்க்கும் அரும்பணியில் ஈடுபடுகிறது திருமடம்.  

சிலரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் கிடைப்பது அரிது; ஆனால், அவர்களது அரும்பணியின் தொடர்ச்சி அவர்களது பெயரை என்றென்றும் வாழவைக்கும். நமச்சிவாய தேசிகரின் புகழை திருவாவடுதுறை ஆதீனம் நிலைநாட்டி இருக்கிறது. நமச்சிவாய தேசிகர் பதம் பணிந்து தமிழ் வளர்ப்போம் நாமும்.

காண்க:  
திருவாவடுதுறை ஆதீனம் 
திருவாவடுதுறையின் ஆன்மிகப் புரட்சி 

குறிப்பு: நமச்சிவாய தேசிகர் குறித்த மேலதிக தகவல்கள் அறிந்தவர்கள் இந்த வலைப்பூவுக்கு அனுப்பி உதவுமாறு வேண்டுகிறோம்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக