
குரு தேக்பகதூர்
பலிதானம்: நவ. 11 (1675 )
சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குரு தேக்பகதூர். 1621 , ஏப்ரல் 1 ல் பிறந்தவர். குரு ஹர்கிஷனுக்கு அடுத்து சீக்கியர்களின் தலைவரானவர்.
இஸ்லாமிய ஆட்சியாளர்களான முகலாயர்கள் இந்துக்களுக்கு அளித்த கொடுமைகளை எதிர்க்க உருவான சமயம் சீக்கியம். இதனை போர்ப்படையாக மாற்றிய குரு கோவிந்த சிம்மனின் தந்தை தேக் பகதூர். இவரது பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தம் எனப்படும் ஸ்ரீ குருகிரந்தத்தின் இறுதிப்பகுதியில் உள்ளன.
காஷ்மீரில் பண்டிட்களை (பிராமணர்கள்) முஸ்லிம்கள் ஆக்க அட்டூழியம் புரிந்த அவுரங்கசீப்பின் படைகளை எதிர்த்த காரணத்தால் கைது செய்யப்பட குரு தேக் பகதூர், கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆட்பட்டார். அவரை முஸ்லிமாக மாற்றிவிட்டால், இதர மக்களை மதம் மாற்றுவது எளிது என்று கருதிய அவுரங்கசீப், பல சித்ரவதைகளைச் செய்தார். ஆயினும் ''தலையைத் தான் இழப்பேன்; தர்மத்தை அல்ல'' என்று முழங்கி, தில்லி, சாந்தினி சௌக்கில், வீரமரணத்தை (11.11.1675 ) தழுவினார், சீக்கியர்களின் ஒன்பதாவது குரு.
அவரது தலைவீழ்த்தப்பட்டாலும்,ஹிந்து தர்மம் குரு கோவிந்த சிம்மனால் காக்கப்பட்டது. ஹிந்து தர்மம் காக்க, மத மாற்றத்தை எதிர்த்து உயிர்நீத்த குரு தேக்பகதூரின் நினைவுகள் என்றும் வாழும்.
காண்க:
Guru Tegh Bagadur
Guru Tegh Bagadur
Martyrdom of Guru Tegh Bahadur
The Ninth Master
குரு கிரந்தம்
சீக்கிய பலிதானி
.
1 கருத்து:
வித்தியாசமான தேடலும் பதிவும் ,சீக்கிய மதம் உருவனதைப்பார்த்தால் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் தொடர்பு உள்ளதுபோல் !
கருத்துரையிடுக