நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

12.11.10

ஹிந்து பல்கலையின் நிறுவனர்




பண்டித மதன்மோகன் மாளவியா
மறைவு: நவ. 12

அரசியல் தலைவர், கல்வியாளர், பத்திரிகையாளர், விடுதலைவீரர், ஹிந்து தேசியவாதி ஆகிய பன்முகங்களுக்கு உரியவர் பண்டித மதன்மோகன் மாளவியா. காசியில் 1916ல்  ஹிந்து பல்கலைக்கழகம் நிறுவியவர் மாளவியா. பாரதத்தில்  ஸ்கவுட்   இயக்கத்தை நிறுவியவரும் (1913) இவரே.

உத்தரபிரதேசத்தின் பிரயாகையில் (அலஹாபாத்) 1861, டிச. 25ல் பிறந்தவர் மாளவியா. சிறுவயதிலேயே சம்ஸ்கிருத நூல்களைப் படித்த மதன்மோகன், பின்னாளில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். அப்போது தாதாபாய் நௌரோஜியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்று முறை (1909, 1918, 1932 ) இருந்தவர் மாளவியா. 1909ல் இவர் அலஹாபாதில் நடத்திய 'தி லீடர்' என்ற பத்திரிகை  விடுதலைப் போராட்டக்  காலத்தில் பெரும் பங்கு வகித்தது.

ஆங்கிலேயரால் பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் (1909) துவங்கப்பட்ட ஸ்கவுட் இயக்கத்துக்கு மாற்றாக, இந்தியர்களுக்கென்று பிரத்யேகமாக ஸ்கவுட் இயக்கத்தை 'சேவா சமிதி' என்ற பெயரில் மாலவியாவும் அவரது நண்பர்களும் தோற்றுவித்தனர். வழக்கறிஞர் தொழிலில் மிக பிரபலம் அடைந்திருந்த நேரத்திலும் சமூகப் பணிக்காக அதனை உதறிவிட்டு சந்நியாசி போல வாழ்ந்தார். ஆயினும் ஸௌரி ஸௌராவில்  நடந்த வன்முறைக்காக 177  போராளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன், அவர்களுக்காக வாதாடி, 156 பேரை விடுவித்தார்.

 ஒத்துழையாமை இயக்கத்தில் முன்னணி வகித்த மாளவியா, முஸ்லிம்களை திருப்திப்படுத்த கிலாபத் இயக்கத்தில் காங்கிரஸ் பங்கேற்றதை ஆட்சேபித்தார். விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களை இணைப்பதற்காக அவர்களை தாஜா செய்வது, முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி வழங்குவது, நாட்டின் பிரிவினைக்கே வழிகோலும் என்று அவர் மகாத்மா காந்தியை எச்சரித்தது, 1947ல் உண்மையானது. ''சத்யமேவ ஜெயதே'' (உண்மையே வெல்லும்)என்பதே இவரது தாரக மந்திரம்.

நாட்டில் நிலவிய தீண்டாமைப் பேயை ஒழிக்க பல முயற்சிகளில் ஈடுபட்டவர் மாளவியா. அரிஜன ஆலயப் பிரவேசப் போராட்டங்களை அதற்காக நடத்தினார். 1919 முதல் 1926 வரை மத்திய சட்டசபையின் உறுப்பினராக பதவி வகித்த மாளவியா முதல் வட்டமேஜை மாநாட்டில் (1931) இந்தியப் பிரதிநிதியாக சென்றவர். 1946 , நவ. 12ல் தனது 86வது வயதில் மாளவியா மறைந்தார்.

காண்க:
Banaras  Hindu  University
செருப்புக்கும் உண்டு சிறப்பு
The Man ; The spirit ; The Vision 
150th birth anniversary
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக