நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

7.11.10

தேமதுர தமிழிசை தெருவெங்கும் ஒலித்திட...


பெரியசாமி தூரன்
செப். 26, 1908 - ஜன. 20, 1987

       மனதிற்கு நிறைவையும் செவிகளுக்கு இனிமையும்  ஏற்படுதியது  அவ்விழா.  பரபரப்பு,  இரைச்சல், வாகனங்களின் நெரிசல்,  கரடுமுரடான சாலைகளுடன் போராட்டம்.  இவற்றை எல்லாம் தாண்டி, சென்னை மாநகரில் இது போன்ற நிகழ்சிகளில் கலந்துகொள்வது பெரிய பாக்கியம்தான்.

        நமது அன்றாட வாழ்க்கையில் மேற்கத்திய நாகரிக மோகம் வேகமாகப்  பரவிவரும் வேளையில் நமது குடும்பப் பாரம்பரியத்தையும்  வழிவழி வரும்  மூல்யங்களையும் நினைவுபடுத்துவதாக  அமைந்திருந்தது தமிழறிஞர் பெ. தூரன் அவர்களின் 102 ம் ஆண்டு நிறைவு விழா.

         5 திரிகள் கொண்ட பெரிய குத்துவிளக்கை - ஒவ்வொரு திரியையும் பெ.தூரன் அவர்களின் மகன்களும் மருமகள்களும் ஏற்றி விழாவை துவக்கியது மங்களம்.  அடுத்து, தமிழிசைப் பாட்டுக்களின் சங்கீத மழை பெய்யத் தொடங்கியது.  எளிமையும்  கருத்தாழமும் கொண்ட பெ.தூரன் அவர்களின் அற்புதமான தமிழ்க் கீர்த்தனைகளைப்  பாடிய இளம் சிறுவர் சிறுமிகளின் குரல்கள் அரங்கத்தை நிறைத்தன.

          தினமணி ஆசிரியர்  திரு. வைத்தியநாதன் தனது சிறப்புரையில் "இன்றைய கவிஞர்கள்  புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்படாது, புதிய தமிழ்க் கீர்த்தனைகளை எழுத வேண்டும்; கர்நாடக நவாப் காலத்தில் எழுதப்பட்ட கர்நாடக இசை கீர்த்தனைகள் போல தமிழிலும் எழுதப்பட இசை அறிஞர்கள் முன்வர வேண்டும்'' என்று யோசனை சொன்னதும் வரவேற்பிற்குரியது.

          அதையடுத்து உரையாற்றிய முன்னாள் தொலைக்காட்சி இயக்குனர் அ.நடராஜன்,  ஜப்பானியப் பேராசிரியர் ஒருவர் பி.பி.சி. யில் அளித்த பேட்டியை நினைவுகூர்ந்தார். "தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் வேறொரு விஞ்ஞானி மின்விளக்கை கண்டுபிடித்திருப்பார்; புவிஈர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் இன்னொருவர் கண்டுபிடித்திருப்பார்; ஆனால் தியாகராஜர் கீர்த்தனைகளையோ, முத்துசாமி தீக்ஷிதர்  கீர்த்தனைகளையோ, வேறொருவர் எழுத முடியாது, அவர்களால்தான் முடியும்" என்றது நமது முன்னோர்களின் பெருமையில் நம்மை நிமிரச்செய்தது. 

           இறுதியாக "உலகிற்கு வழிக்காட்டும் பாரதத்திற்கு பெருமையையும்,  தேமதுரத் தமிழுக்கு வலிமையையும் சேர்க்கும் இதுபோன்ற விழாக்களை அரசாங்கங்கள் அல்லவா நடத்த வேண்டும்?" என்ற வினா எழும்ப, மனம்  கவலையில் ஆழ்ந்தது. செம்மொழி மாநாடு என்ற பெயரில் பல கோடி செலவிட்ட தமிழக அரசு, தூரன் போன்ற பெரியோர்களின் நினைவைப் போற்ற மறப்பது ஏனோ?
-ம.கொ.சி.ராஜேந்திரன். 

காண்க:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக