நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.

இத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.

இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

நமது பயணம் என்றும் தொடரும்

தேசிய சிந்தனை

தேசமே தெய்வம் (புதிய தளம்)
7.11.10

விடுதலை கீதம் இசைத்த பத்திரிகையாளர்பிபின் சந்திர பால்
பிறந்த நாள்: நவ.7

சுதந்திரப் போராட்டக் காலத்தில் 'லால்-பால்-பால்' என்ற திரிசூலமாகக்   கருதப்பட்டவர்கள்  லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால் ஆகியோர். சுதந்திரம் என்பது பிச்சையிட்டு வாங்குவது அல்ல; போராடிப் பெற வேண்டிய பிறப்புரிமை என்பது, இவர்களது உபதேசத்தால் தான் அடிமைப்பட்ட மக்களுக்குத் தெரிய வந்தது.

இவர்களில், ஆசிரியர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர், நூலகர், எழுத்தாளர் போன்ற பன்முகங்களுக்கு சொந்தக்காரர், வங்கத்தில் பிறந்த (1888, நவ. 7 ) பிபின் சந்திர பால். 'வந்தே மாதரம்' என்ற பத்திரிகையை  நடத்திய பிபின் சந்திரர், தமிழகத்தின் வ.உ.சி, பாரதி, சிவா அணிக்கு உத்வேகம் அளித்தவர். புரட்சிவீரர் அரவிந்தருக்கு எதிராக சாட்சியம் அளிக்க மறுத்ததற்காக ஆறுமாத சிறைத் தண்டனை பெற்றவர்.

அந்நியத் துணி எரிப்பு, அந்நியப் பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி சிந்தனை ஆகியவை பிபின் சந்திரரின் போதனைகள். மகாத்மா காந்தி காங்கிரசில் பேரிடம் பெறும்வரை பிபின் சந்திரரின் முக்கியத்துவம் மிகுந்திருந்தது. 1921 ல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிபின் சந்திரர், ''என்னிடம் மந்திரமோ, மாயமோ இல்லை; இயல்புநிலையை உத்தேசித்தே நான் போராட்டங்களை வகுக்கிறேன். கண்களை மூடிக்கொண்டு என் பின்னால் வரும்படி என்னால் யாருக்கும் உபதேசிக்க முடியாது'' என்று காந்தியின் அஹிம்சையைக் கண்டித்துப் பேசினார் பிபின்.

காங்கிரஸ் கட்சியில் காந்தியின் ஆளுமை அதிகரித்தது, முஸ்லிம் லீகை தாஜா செய்தது, கிலாபத் இயக்கத்தில் காங்கிரஸ் பங்கேற்பு ஆகிய காரணங்களால், தீவிர அரசியலிலிருந்து விலகிய பிபிப் சந்திரர், ஏழ்மையான நிலையில், 1932 , மே 20 ல் மறைந்தார். முற்போக்காளரான பிபின் சந்திரர், விதவையை மறுமணம் செய்வதற்காக குடும்பத்தையே பிரிந்தவர். இவரது எழுத்துகள், சுதந்திர வேட்கையைப் பரப்பிய அக்னிப் பூக்களாக நாடு முழுவதும் வலம் வந்தன. இந்திய பத்திரிகையாளர்களுக்கு முன்னுதாரணம் பிபின் சந்திரர் என்றால் மிகையில்லை.

காண்க:
Bipin Chandra Pal
Bipin Chandra Pal - I love india 
Robinson library 
vandemataram.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக