நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

8.11.10

சுயராஜ்யம் காண உழைத்தவர்




தேசபந்து
சித்தரஞ்சன் தாஸ்
பிறப்பு: நவ. 5


வங்கத்தின் தாக்கா அருகிலுள்ள (தற்போதைய வங்கதேசம்) விக்ரம்பூரில் வசதியான தாஸ் குடும்பத்தில் 1870, நவ. 5 ல் பிறந்தவர் சித்தரஞ்சன். இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பயின்றுவந்த சித்தரஞ்சன், அலிப்பூர் சதிவழக்கில் கொடுஞ்சிறை வசப்பட்ட புரட்சியாளர் அரவிந்தருக்காக (1909) வாதாடி விடுதலை பெற்றுத் தந்தார். அதன்மூலமாக நாடு முழுவதும் பிரபலமானார்.

காங்கிரஸ் கட்சியில் வங்கத்தின் மாபெரும் தலைவராக உயர்ந்த சித்தரஞ்சன் தாஸ், 1919 - 1922  ல்  ஒத்துழையாமை இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தினார். ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக இவர் 'பார்வார்ட்' என்ற பத்திரிகையை நடத்தினார். பின்னாளில் இது 'லிபர்ட்டி' என்ற பெயரில் வெளியானது.கொல்கத்தா மாநகராட்சி துவங்கியவுடன் நடந்த தேர்தலில் நகரின்  முதல் மேயராகத் தேர்வு செய்யப்பட்டவர் தாஸ்.

கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், மகாத்மா காந்தியுடன்  முரண்பட்டு,  கட்சியிலிருந்து வெளியேறினார்.  அதன் பிறகு மோதிலால் நேருவுடன் இணைந்து சுயராஜ்யக் கட்சியை நிறுவினார். சமய நல்லிணக்கம், தேசியக் கல்வி, அஹிம்சைப் போராட்டம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர் தாஸ். இவரது சீடராகவே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விளங்கினார்.

நாட்டின் நண்பன் என்ற பொருள் படும் 'தேசபந்து' சிறப்புப்பெயரால் அழைக்கப்படும் சித்தரஞ்சன் தாஸ், 1925 , ஜூன் 16ல் டார்ஜிலிங்கில் உடல்நலக் குறைவால் மறைந்தார்.

காண்க:
சித்தரஞ்சன் தாஸ்
Chittaranjan Das 
Quotes of Das 
I love India 
Deshbandhu Chittaranjan Das

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக