"எல்லோரும் சந்தோஷத்தை தேடுகிறார்கள்; வசதியாய் வாழ பொருளைத் தேடுகிறார்கள் ஆனால் நான் உண்மையான அப்பா, அம்மாவைத் தேடுகிறேன்" - இப்படிச் சொன்ன அந்தச் சிறுமியின் பெயர் சித்ரா; வயது 14 அல்லது 15 இருக்கலாம். முகத்தில் பரிதாபத்தையும் பேச்சில் ஏமாற்றத்தையும் கொண்டு தொடர்ந்தாள் அச்சிறுமி. பார்வையாளர்களையும், நிகழ்ச்சி அமைப்பாளரை அவரது குரல் கட்டிப் போட்டது.
"அறியா வயதில் என் குடிகார அப்பாவுக்கும் முரண்டு பிடிக்கும் அம்மாவுக்கும் நடக்கும் தினசரி சண்டை. எனக்கும் என் அண்ணனுக்கும் பார்த்துப் பார்த்து மனதில் வெறுப்பும் பயமுமே நிறைந்திருந்தது. ஒரு நாள் இருவரும் திரும்பவும் புதிதாக திருமணம் செய்து கொண்டார்கள். எங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. என்னை (அம்மாவின் அம்மா) பாட்டியும், என் அண்ணனை (அப்பாவின் அம்மா) வளர்த்தார்கள். பத்து வருடங்களுக்கு பிறகுதான் எனக்கு ஒரு அண்ணன் இருப்பதை, அதுவும் ஒரு சுற்றுச்சுவர் குறுக்கில் இருந்த பள்ளிக்கூடத்தில் இருப்பதையும் அறிந்தேன். எனக்கு ஒரு அண்ணன் இருப்பதைக் கேட்டு மனதில் சந்தோஷம். ஆனால் பார்க்க முடியவில்லை. 10 கி,மீ. தூரத்தில் வளர்ந்துவரும் அவனை நான் இதுவரை பார்த்ததே இல்லை''...
தன்னை வளர்க்கும் பாட்டி குடிப்பழக்கம் உள்ளவராய், உடல் வலு இல்லாதவளாய் வேண்டா வெறுப்பாய் இருப்பதை உணர்ந்த சித்ரா அரங்கத்தை நோக்கி கேட்ட கேள்வி அரங்கத்தையே நிசப்தத்திலும் எல்லோரின் மனங்களையும் துக்கத்திலும் நிறைந்தது.
"பாட்டிக்கு பிறகு என் எதிர்காலம் என்னவாகும்? " அழுகையும் ஆவேசமாய் வெளிவந்த அவளது குரல் சமுதாயத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது;பார்வையாளர்கள் பலரின் கண்களில் நீர் ததும்பியது. சிலர் வெளிப்படையாகவே கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுததையும் காணமுடிந்தது.
நிகழ்ச்சி அமைப்பாளர் ஒலிபெருக்கியை (மைக்) மேசைமீது வைத்துவிட்டு வெளியேறுகிறார். அரங்கமே அதிர்ச்சியில் உறைந்ததுபோல் அமர்ந்திருந்தது. சற்று நேரத்தில் நிகழ்ச்சி அமைப்பாளர் திரும்புகிறார். அவரது நடையில், முகத்தில் சித்ராவின் கேள்விக்கு விடை கண்ட உறுதி பிரதிபலித்தது.
-மேலே நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி, கடந்த ஒரு வருடத்திற்கு முன் தர்மபுரியில் நடந்த ஜெயா டிவியின் 'மக்கள் அரங்கம்' ஆகும். நிகழ்ச்சி அமைப்பாளர்: பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான விசு அவர்கள்.
இன்று சித்ரா +2 படிக்கும் பெண். தனது வாழ்க்கையில் நம்பிக்கை ஒழி ஏற்றிய விசுவை அவள் அப்பாவாகவே பார்க்கிறாள்; தனக்கு அடைக்கலம் கொடுத்த விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள சாரதா ஆசிரமத்தை கோயிலாகவே காண்கிறாள்.
விசு, ஜெயா டிவி, சாரதா ஆசிரமத் துறவிகள் இருக்கும் திசையை நோக்கி எனது வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
சித்ராவை போல் எத்தனைச் சித்ராக்களுக்கு விசு மாதிரி அப்பாக்கள் கிடைப்பார்கள்? இல்லை, கோயிலாக சாரதா ஆஸ்ரமங்கள் அமையும்? நாம் ஒவ்வொருவரும் நல்ல தந்தையாக, நல்ல தாயாக, நல்ல ஆசிரியனாக, நல்ல குடிமகனாக, நல்ல தேசபக்தனாக மாறத்தான் வேண்டும்.
-ம.கொ.சி.ராஜேந்திரன்.

1 கருத்து:
nallavelai, chitra oru christian madabodakar kaiyil kidaikkavillai.
Inneram pala padirigalum avar vazhvai surai aadi iruppar. sury,villupuram
கருத்துரையிடுக