நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

2.11.10

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!



அன்பிற்குரிய சகோதரர்களுக்கு,
வணக்கம்.

நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் திருநாள் தான். ஒவ்வொரு இடமும் புனித இடம் தான். ஆயினும், மக்கள் அனைவரும் அகம் மகிழ்ந்து கொண்டாடும் திருவிழாக்களில் தீபாவளி பண்டிகை முதன்மை வகிக்கிறது.

பண்டிகைகள் நமது அன்றாட வாழ்விலிருந்து நமக்கு ஓய்வையும் உத்வேகத்தையும் தருகின்றன;  நாட்டையும் சமுதாயத்தையும் வழிப்படுத்துகின்றன;  உறவுகளை ஒருங்கிணைக்கின்றன. தீபாவளி பண்டிகைகளின் அரசனாக நாட்டு மக்கள் அனைவரையும் குதூகலிக்கச் செய்கிறது.

இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் தீபாவளி பரபரப்பு கூடிவருகிறது. இந்நிலையில், தீபாவளி குறித்த இரு கட்டுரைகளையும்  ஒரு கவிதையையும்  நமது நண்பர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்ற பேராவலில் இங்கு,  அவற்றின் சுட்டிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை சொடுக்கி,  முழுமையாகப் படியுங்கள்.

(நன்றி:  ஆசிரியர்  குழு / தமிழ் ஹிந்து)
(நன்றி: அரவிந்தன் நீலகண்டன் /  தமிழ் பேப்பர்)
(நன்றி: வ.மு.முரளி / குழலும் யாழும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக