நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

5.6.11

அன்று சொன்ன பொன்மொழி

நம்முடைய தேசிய வாழ்க்கைக்கு சாது, மகான்களின் வழிகாட்டல் மிகவும் அவசியமாகும்.

நம் கலாச்சாரத்தைப்  பிரதிபலிக்கும்  காவிக்கொடி,  வேள்வித்தீயின்   ஜுவாலைகளைப்  பிரதிபலிக்கிறது.   நம் வாழ்வு, உழைப்பு, விழிப்பு, பேச்சு எல்லாவற்றுக்கும்  ஒரு லட்சியமாகத் திகழ்கிறது.  அதன் அறைகூவலை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச்  செல்லும் பணியைச் செய்கிறது,  சாது,  மகான்களின் கூட்டம்.

நம்முடைய நடைமுறையில் பேராசை, பிறர் பொருளைக் கவர்தல் ஆகியவற்றைத் தடுக்க வேண்டும். பலவீனமடைந்துள்ள சமுதாயம் மீண்டும் மேன்மை அடைய வேண்டும்; அதன் பேராற்றலுக்கு முன் துஷ்டர்கள் நிற்கக்கூட முடியாத அளவிற்கு சமுதாய வாழ்க்கை சுத்தமான உள்ளன்பு வாய்ந்ததாக வேண்டும். ஆனால் 'இந்தச் செல்வம் என்னுடையது' என்ற மனோபாவனையுடன் அல்ல.

'இது சமுதாய சேவைக்காக பரமாத்மா எனக்கு அளித்தது. இதை சமுதாயத்திற்கே அர்ப்பணிப்பேன்' - இந்த  அடிப்படையை வைத்து  ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்  எல்லா  உயிர்களிலும் இறைவன்  இருக்கிறான் என்ற உணர்வை சாதுக்கள் மண்டலி (கூட்டமைப்பு) யின் வழிநடத்தல் மூலம் பெறுவது நம் லட்சியம்.

-ஸ்ரீ குருஜி கோல்வல்கர்
(1952 -ல் கான்பூரில் நடந்த சாது சம்மேளனத்தில் நிகழ்த்திய உரையில் இருந்து)

.
இன்று குருஜி கோல்வல்கர் நினைவு நாள் (ஜூன் 5)

காண்க:



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக