நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

28.2.11

அசரீரி


பாபு ராஜேந்திர பிரசாத்
நினைவு: பிப். 28

.
''ஒரு தேசத்தின் நல்வாழ்வு என்பது அந்த நாட்டை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களின் நேர்மையையும் திறமையையும் பொறுத்துத்தான் அமையும். 
அரசியல் சட்டம் என்பது ஓர் உயிரற்ற இயந்திரம்தான். அதை இயக்குபவர்களின் திறமையைப் பொறுத்துத் தான் விளைவுகளை எதிர்பார்க்க முடியும். இந்தியாவின் இன்றியமையாத தேவை ஒழுக்கமும், நேர்மையும், மக்கள் நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் தன்னலமற்ற தலைமையும்தான்''
.
- அரசியல் நிர்ணய சபையில் பாபு ராஜேந்திர பிரசாத் பேசியது.
ஆதாரம்: தினமணி தலையங்கம் (26.01.2010)
.
காண்க:
.

கோவை பாடிய நாயனார்

காரி நாயனார்
திருநட்சத்திரம்: மாசி- 16 -பூராடம்
(பிப். 28)
திருக்கடவூரிலே பிறந்தவர் காரியார். அவர் தமிழ்மொழியிலே பெரும் புலமைமிக்கவர். சிவபெருமானை என்றும் மறக்காதவர். இவர் கோவை பாடல்களைப் பாடுவதில் சிறந்தவர். அந்தப் பாடல்களில் உள்ள சொற்கள் எளிதில் இருக்கும்; பொருளும் எளிதில் விளங்கும். இவர் பாடிய காரியார் கோவை மறைந்த நூல்கள் பட்டியலில் உள்ளது.
காரியார் சேர, சோழ மன்னர்களிடம் செல்வார். பின்னர், தம் பாடல்களுக்கு உரிய பொருளை விவரிப்பார். அதனால் மன்னர்கள் மனமகிழ்ந்து காரியாருக்கு பொன்னையும், பொருளையும் பரிசாகக்  கொடுப்பார்கள். அப்பொருளைக் கொண்டு காரியார் திருக்கோயில் கட்டும் பணியினை செய்து வந்தார். மேலும் சிவனடியார்களுக்கும் உதவி வந்தார்.
இவ்வாறு காரியார் தனக்கு கிடைத்துவந்த பொருள்களில் தொண்டு செய்து வந்தார். இதனால் உலகமெல்லாம் அவர் தம் திருத்தொண்டை போற்றியது. இறுதியில் காரியார் சிவலோகப் பதவி அடைந்தார். அன்று முதல் அவர் காரி நாயனார் என்று இவர் அழைக்கப்படுகிறார்.
“கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
- அம்பை சிவன்.
காண்க:
.

27.2.11

காஷ்மீர் பிரச்னை புரியாத புதிரா?
சிந்தனைக் களம்

நாடு விடுதலை பெற்ற தினத்திலிருந்து இன்றுவரை தீராத பிரச்னையாக இருப்பது காஷ்மீர் பிரச்னையாகும். பாரத நாட்டிற்கு தீராத தலைவலியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் இப் பிரச்னையின் உண்மை நிலை எல்லோருக்கும்  தெரிந்திருக்கிறதா  என்பதே  பெரிய கேள்விக்குறி
1947,  ஆக. 15ந் தேதி நாடு விடுதலை பெற்ற போது இருந்த சூழ்நிலையைப் பற்றி தெரிந்துகொண்டால் மட்டுமேகாஷ்மீர் பிரச்னையையின் ஆழம் நன்கு புரியும்ஆகவே பிரச்னையின் ஆணிவேர் எது என்பது தெரியாமல் இருப்பதால், பலரும் காஷ்மீர் சம்பந்தமாக எழுதும் கட்டுரைகளாகட்டும், தங்களின் கருத்துக்களாகட்டும் பலருக்கு  காஷ்மீர் பிரச்னை புரியாத புதிராகவே தென்படுகிறது.

 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இனைந்த நிகழ்வுகளையே மறுபரிசிலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறதுகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரிவினைவாதிகள் தங்கள் கோரிக்கைக்கு வைக்கும் முக்கியமான காரணம், .நா சபையில் கொண்டுவரப்பட்ட  தீர்மானமாகும். மேலும் இந்தியாவுடன் இனைந்த 500க்கு மேற்பட்ட சமஸ்தானங்களுக்குஇணைந்தபின் எந்த சிறப்பு அந்தஸ்தும் கொடுக்கப்படவில்லை, மாறாக காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தான அரசியல் ஷரத்து 370 வழங்கப்பட்டதுஆனால் .நா.சபையின் தீர்மானத்தை பாகிஸ்தான் அரசு எவ்வாறு மீறியது என்பதும், பல் வேறு காலகட்டங்களில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நீர்த்துப் போக வைத்த நாடு பாகிஸ்தான் என்பதும் பலருக்கு தெரியாத செய்தியாகும்

பாரத நாட்டிற்கு ஆங்கில ஏகாதிபத்தியம் விடுதலை கொடுத்தபோதே அதில் ஒரு சிக்கலையும் புகுத்தியது .   பாரத நாட்டிற்கு விடுதலை கொடுப்பதற்கு முன் இங்கிலாந்து அரசாங்கம் இந்திய சுதந்திர சட்டம் 1947 என்கிற சட்டத்தை (Indian Independence Act 1947) இயற்றியது.  18.7.1947ந் தேதி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இச் சட்டம் ஒப்புதல் பெறப்பட்தது. நாடுஇரண்டாகப்  பிரிக்கப்படும் என்றும்,  அவை இந்தியா, பாகிஸ்தான் என பிரிக்கப்பட்டு பின் அதன்  எல்லைகளும்  வரையறுக்கப்படும் என்றும்  இச் சட்டம் தெரிவிக்கிறது.
ஆங்கில  அரசின் நேரடி நிர்வாகத்தில் இருந்த பகுதிகளுக்கு மட்டும் சுதந்திரம் கொடுக்கப்பட்டது,  500க்கு மேற்பட்ட  சமஸ்தானங்களுக்கு விடுதலை கொடுக்கப்பட்டு  ஆங்கில அரசால் இயற்றப்பட்ட இச் சட்டத்தில், விடுதலை கொடுக்கப்பட்ட சமஸ்தான்கள் விடுதலை பெற்றாலும் அந்த சமஸ்தானங்கள் தனிநாடாக செயல்பட இயலாது. விடுதலை பெற்ற சமஸ்தானங்கள், இந்தியா, பாகிஸ்தான் எனும் இரண்டு நாடுகளில் ஏதேனும் ஒன்றுடன் இணைய வேண்டும் என்பதுதான் சட்டத்தில் கொடுக்கப்பட்ட முக்கியமான ஷரத்து (That all Indian princely states shall be released from their official commitments and treaty relationships with the British Empire, and will be free to join either dominionஆகவே 500க்கு மேற்பட்ட சமஸ்தானங்களை இணைக்கும் பொறுப்பை அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் ஏற்றுக் கொண்டு அனைத்து சமஸ்தானங்களையும் இணைக்கும்  பணியை செவ்வனே செய்து முடித்தார்.
 சமஸ்தானங்கள் இணைப்பின்போது மூன்று சமஸ்தனங்கள்  மட்டும் உடனடியாக இணையவில்லைஅவை, ஜம்மு-காஷ்மீர், ஹைதராபாத் நிஸாம்ஜூனோகாட் என்கிற மூன்று சமஸ்தானங்கள். காஷ்மீர் சமஸ்தானத்தை தவிர மற்ற இரண்டும் சர்தாரின் எச்சரிக்கை காரணமாக உடனடியாக இந்தியாவுடன் இணைந்துவிட்டனஆனால் ஜம்முகாஷ்மீர் சமஸ்தானம் இணைய முடியாததற்கு முக்கியமான சில காரணங்கள்  உண்டு
 அதாவது, பஞ்சாப் பகுதி மேற்கு பஞ்சாப் என்றும் கிழக்கு பஞ்சாப் என்றும் பிரிக்கப்பட்டது, பிரிக்கப்பட்ட பகுதிகளின் எல்லைகள் உடனடியாக வரையரை செய்யப்படவில்லை  (a) the Districts specified in the Second Schedule to this Act shall be treated as the territories to be comprised in the new Province of West Punjab ; and  (b) the remainder of the territories comprised

இந்தியா- பாகிஸ்தான் எல்லைகள் பிரிக்கப்படும் போது, பிரிக்கப்பட்ட பஞ்சாப் பகுதிகளின்  எல்லைகள் உடனடியாக நிர்ணயிக்க இயலாத நிலையில், அன்றைய சூழ்நிலை அமைந்து இருந்தது.   இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப் பகுதி பாகிஸ்தானுக்கு சென்றால்காஷ்மீர் மாநிலத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கொண்டுவரும் தரைமார்க்கம் தடைப்பட்டால் மிகுந்த சிரமத்திற்கு காஷ்மீர் மக்கள் ஆளாவர்கள்ஏனென்றால் குருதாஸ்பூர் உட்பட மூன்று மாவட்டங்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இந்த வழிதான் காஷ்மீர் மாநிலத்திற்குத்  தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கொண்டு வரும் ஒரே தரைமார்க்கமாகும். ஆகவே காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் இணைப்பிற்கு  உடனடியாக ஒப்புதல் கொடுக்கவில்லை.   
 ஆனாலும் 1947 இந்திய சுதந்திர சட்டப்படி ஏதேனும் ஒரு நாட்டுடன் இணைய வேண்டும் என்பதால் மகாராஜா ஹரிசிங், இந்தியா, பாகிஸ்தானுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன்படிக்கைக்கு  Standstill Agreement  என்று பெயர்.  அதாவது தற்போது என்ன நிலையில் காஷ்மீர் சமஸ்தானம் உள்ளதோ அதேபோல இருக்க வேண்டும் என்பதாகும்.   இந்த உண்மை எத்தனை இந்தியர்களுக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் சில மாதங்களில் Radeliffe Award  ன் மூலம் குருதாஸ்பூர் மாவட்டத்தின் சில பகுதிகள் குறிப்பாக பதான்கோட்டிற்கு செல்லும் ரயில்பாதையும் சியால்கோட் மூலம் இந்தியாவிற்குள் நுழையும் பகுதிகளும் இந்தியாவிற்கு  என்று   வரையறுக்கப்பட்டது. இந்தப் பிரிவின் காரணமாக மகாராஜாவின் உண்மையான அச்சம் தவிர்க்கப்பட்டது
 இந் நிலையில்  காஷ்மீரை ஆக்கிரமிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியாவின் மீது பாகிஸ்தான் போர் தொடுப்பதற்கு முன்பே தனது குள்ளநரித்  தனத்தை பாகிஸ்தான்  காட்டியது.  1947, ஆகஸ்ட் 14ந் தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது, கராச்சியில் உள்ள பல இடங்களில் பாகிஸ்தானின் கொடி பறக்கவிடப்பட்டதுஆனால் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தபால் தந்தி அலுவலகத்தின் தலைமையிடமாக அமைந்தது சியால்கோட் பகுதியாகும். சுதந்திரம் அறிவித்தபோது சியால்கோட் பகுதி எந்த நாட்டிற்கு என்பது தெரியாத காரணத்தால், பாகிஸ்தானின் கொடி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தபால் தந்தி அலுவலங்களில் பறக்க விடப்பட்டது
இந்த செயல்பாட்டைக்  கண்டித்து காஷ்மீர் இந்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாலும், காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் தனது பலத்த எதிர்ப்பை  பாகிஸ்தானுக்கு தெரிவித்தாலும் உடனடியாக சியால்கோட் பகுதியில் உள்ள தபால் நிலைய அலுவலங்கள் மீது பறக்கவிடப்பட்ட  பாகிஸ்தான் கொடி அகற்றப்பட்டதுஇந்த சம்பவம் மூலமாக மகாராஜாவிற்கு காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானுடன் இணைக்க விருப்பம் இல்லை என்பது தெளிவாகிறது.
 1947, செப்டம்பர் மாதம் மலைவாழ் பழங்குடி முரட்டுக் கூட்டமான பத்தானியர்கள் மூலமாக பாகிஸ்தான் காஷ்மீரை மீட்க இந்தியாவின் மீது படையெடுப்பு நடத்தியதுஇந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் வைத்த பெயர் 'ஆபரேஷன் குல்மார்க்'.   படையெடுப்பு எனும் இக்கட்டான சூழ்நிலையில் காஷ்மீர் சமஸ்தானம் சிக்கிக் கொண்டதால்இந்தச்  சிக்கலில் இருந்து மீட்பதற்காக இந்தியாவின் உதவி தேவைப்படுவதால், மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணைய சம்மதம் தெரிவித்தார்
 இந்திய அரசு  ஸ்ரீநகரைக் காக்க தனது படைகளை அனுப்பி முரட்டுக் கூட்டத்தை வெளியேற்றியது. இந்தியா தனது படைகளை அனுப்பவதற்கு முன் காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் 26.10.1947ல் முறைப்படி மகாராஜா கையெழுத்திட்டார் ;  .நா. சபையில் பாகிஸ்தான் படையெடுப்பு  சம்பந்தமாக இந்தியா புகார் செய்த போது, திட்டமிட்ட இந்தத்  தாக்குதலுக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என  பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 ஆனால், இந்த தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பொறுப்பில் இருந்த அக்பர்கான்,  படைகள் முன்னேறிய சம்பவங்களை ஜின்னாவுக்கு தெரிவித்தபோதுஇந்த ஆண்டு ஈத் பண்டிகையை காஷ்மீரில் கொண்டாடுவோம். அதற்குள் ஸ்ரீநகரைக் கைப்பற்றுங்கள்என உத்திரவிட்டதாக பல வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்தார்கள்
 பழங்குடிப் போராளிகள் ஸ்ரீநகரைக் கைப்பற்றிய பின் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதாக அறிவித்துவிட்டு, ஜின்னா அந்த நகரத்துக்குள் விமரிசையாக நுழைய வேண்டுமென்பது பாகிஸ்தானின் திட்டமாக இருந்தது என வரலாறு ஆசிரியர் திரு.கோபால் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்
இங்கிலாந்து அரசு குறிப்பாக லார்டு மவுண்ட் பேட்டன் பல்வேறு விஷயங்களில் தனது கருத்துக்கு ஏற்ப நேருவை சம்மதிக்க வைத்தார்காஷ்மீர் பிரச்னையில் மவுண்ட் பேட்டன் கருத்துக்கு ஏற்ப பல்வேறு சந்தர்ப்பங்களில் நேரு சில நடவடிக்கைகள் எடுத்தார்அவ்வாறு  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவிற்கு எதிராகவே அமைந்தன.
 வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என 64 ஆண்டுகள் முடிந்த பின்னும் இன்னும் இந்த கோரிக்கையை பிரிவினைவாதிகள்  மீண்டும்  எழுப்புகிறார்கள்இந்தக்  கோரிக்கை எழுப்ப காரணமாக அமைந்தது, .நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்;மானமாகும்ஆனால் இந்தத்  தீர்மானம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் அன்றைய பிரதமர் நேரு என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது
 1947, நவம்பர் மாதம் 1ந் தேதி மவுண்ட் பேட்டன் லாகூர் சென்று, பாகிஸ்தான் கவர்னர்ஜெனரல் ஜின்னாவையும், பிரதமர் லியாகத் அலிகானையும் சந்தித்துவிட்டு திரும்பினார்இந்தச் சந்திப்பின் போது ஜின்னாவும், லியாகத் அலி கானும் இந்தியாவின் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்மகாராஜா ஹரிசிங் காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்த சம்பவத்தை கண்டித்து தங்களது குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்காஷ்மீர் சமஸ்தானம் எந்த நாட்டுடனும்  இணையாமல் இருந்தபோது பாகிஸ்தான் தனது எல்லையை மீறி காஷ்மீரில் அட்டூழியம் செய்யும் ஆயுதந்தாங்கிகளை விரட்டவே அங்கு படைகளை அனுப்பியதாக, மிகப் பெரிய பொய் என்பது தெரிந்தும் திரும்பத்  திரும்ப பாகிஸ்தான் மவுண்ட் பேட்டனிடம் கூறியது.
 
இந்தியாவின் வாதங்களை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையில் பாகிஸ்தான் இருக்கவில்லைகாரணம் காஷ்மீரைக் கைப்பற்றி விடலாம் என தனது படைகள் கொடுத்த வாக்குறுதி தோல்வியடைந்து விட்டது என்பதால் பாகிஸ்தான் முரட்டுப்  பிடிவதத்துடன் இருந்ததுமேலும் இந்திய ராணுவத்தின் பிடிக்குள் இருந்து கொண்டு ஷேக் அப்துல்லா போன்ற இந்தியா சார்பான அரசியல்வாதியின் ஜனநாயக சோஷலிச கோஷங்களுக்கிடையில் எந்த சராசரி முஸ்லிமும் பாகிஸ்தான் வேண்டும் என்று வாக்களிப்பான் என்பதை ஜின்னாவே நம்பவில்லை. இதை அவர்  வெளிப்படையாகவே சொல்லி வந்தார்
 இந்நிலையில் தான், இந்தியாவின் பிரதமர் நேரு அவசரப்பட்டு எவரையும் கலந்து ஆலோசிக்காமல்அப்படியானால் இந்தியப் படைகளுக்கு பதில் .நா.சபையின் படைகளை வரவழைத்து அவற்றின் மேற்பார்வையில் இந்த வாக்கெடுப்பை நடத்திப் பார்த்துவிடுவோம்'' என பாகிஸ்தான் கவர்னருக்கு நம்பிக்கையளித்திருக்கிறார்இந்த கருத்து இந்தியா தெரிவித்த மிகவும் மோசமான கருத்தாகும்
 ஆக காஷ்மீர் விஷயத்தில் .நா.சபையை பஞ்சாயத்துக்கு அழைத்த முதல் பெரிய தவறைச் செய்தது இந்தியாதான் என்றும், அநதத்  தவறுக்கு நேருதான் பொறுப்பு என்று சொல்லப்பட்டாலும்நிஜத்தில் இந்த தவறுக்கு பிள்ளையார் சுழி போட்டது மவுண்ட் பேட்டன்தான்  காஷ்மீர் பிரச்னையை .நா.சபைக்கெல்லாம் எடுத்துச் செல்லக் கூடாது என்று தொடர்ந்து வாதிட்டனர்  படேல் போன்ற இந்திய தலைவர்கள்இவர்களின் கருத்தை சிறிதும் லட்சியம் செய்யாமல் மவுண்ட் பேட்டன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்த சிறிய தவறு இன்றுவரை இந்தியாவின் இறையாண்மைக்கு சவாலாக இருந்து வருகிறது
 1947, டிச. 31ந் தேதி இந்திய பிரதமர் நேரு .நா.சபையின் 35வது விதியின் கீழ் தனது புகார் மனுவை பதிவு செய்தார். அதாவது தனது புகார் மனுவில் தெரிவித்ததுகாஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற கூலிப்படையினரால் தற்போது ஏற்பட்டுள்ள பதட்ட நிலை தொடர்வது இந்தப் பகுதியின் அமைதிக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளதுஎனவே அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும்என்பதாகும்இந்த புகார் மனுவின் மீது விவாதிக்கப்பட்ட போது, பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவின் குற்றச்சாட்டானபாகிஸ்தான் ராணுவமும் முரட்டுப்படையினரும் சேர்ந்து காஷ்மீரில் களம் புகுந்தனர்'' என்ற குற்றச்சாட்டை மறுத்தனர்ஆனால் பாகிஸ்தான் அரசு முரட்டுப்  படையினருக்கு வாகனங்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது என்பதை ஒப்புக் கொண்டனர்
 
இதற்கிடையில் .நா.சபையில் இந்தியா உணர்ச்சிவசப்பட்டு 1948, மார்ச் 8ந் தேதி .நா.மேற்பார்வையில் காஷ்மீரில் வாக்கெடுப்பை நடத்தலாம் என  உறுதியளித்ததுஇந்த உறுதிமொழிக்கு பின் .நா.சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாசகங்கள் மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் பாகிஸ்தான் அரசு அந்தத் தீர்மானத்தின் படி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
 ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்பாகிஸ்தான் சார்பாக எந்தப் படையும்முரட்டுப் படைகள் உட்பட காஷ்மீர் மண்ணில் தொடரக் கூடாது;   உடனடியாக காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும்இந்தியா சார்பில் குறைந்தபட்ச படையே காஷ்மீர் மண்ணில் தொடரலாம் என்றும் இதன் பின் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தலாம்என தீர்மானத்தின் வாசகம் அமைந்தது.
 .நா.சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி பாகிஸ்தான் அரசு இன்றுவரை 'ஆஸாத் காஷ்மீர்' பகுதியிலிருந்து (பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி- POK)  வெளியேறவில்லை என்பதும், தற்போது இந்தியாவில் பயங்கரவாதச்  செயல்களை செய்துவரும் ஜிகாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் லஷ்கர்--தொய்பாவின் பயிற்சி முகாம்கள் இருக்கும் இடமே POK என்பதும் அனைவரும் அறிந்த விஷயம். இந்த உண்மையை இதுவரை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி பொது மக்களுக்கு எடுத்து கூறவில்லை. அதனால் தான் இன்றும் காஷ்மீர் பிரச்னை தொடர்கிறது.
இன்றைய பிரச்னைகளுக்கெல்லாம் காரணம், நேரு தலைமையில் இருந்த காங்கிரஸ் அரசு எடுத்த முன்யோசனையற்ற நடவடிக்கைகளே என்றால் மிகையில்லை. இன்று காஷ்மீர் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்துமாறு கோருபவர்கள் அறிய வேண்டிய விஷயம் இது.
-ஈரோடு சரவணன்