நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

28.2.11

கோவை பாடிய நாயனார்

காரி நாயனார்
திருநட்சத்திரம்: மாசி- 16 -பூராடம்
(பிப். 28)
திருக்கடவூரிலே பிறந்தவர் காரியார். அவர் தமிழ்மொழியிலே பெரும் புலமைமிக்கவர். சிவபெருமானை என்றும் மறக்காதவர். இவர் கோவை பாடல்களைப் பாடுவதில் சிறந்தவர். அந்தப் பாடல்களில் உள்ள சொற்கள் எளிதில் இருக்கும்; பொருளும் எளிதில் விளங்கும். இவர் பாடிய காரியார் கோவை மறைந்த நூல்கள் பட்டியலில் உள்ளது.
காரியார் சேர, சோழ மன்னர்களிடம் செல்வார். பின்னர், தம் பாடல்களுக்கு உரிய பொருளை விவரிப்பார். அதனால் மன்னர்கள் மனமகிழ்ந்து காரியாருக்கு பொன்னையும், பொருளையும் பரிசாகக்  கொடுப்பார்கள். அப்பொருளைக் கொண்டு காரியார் திருக்கோயில் கட்டும் பணியினை செய்து வந்தார். மேலும் சிவனடியார்களுக்கும் உதவி வந்தார்.
இவ்வாறு காரியார் தனக்கு கிடைத்துவந்த பொருள்களில் தொண்டு செய்து வந்தார். இதனால் உலகமெல்லாம் அவர் தம் திருத்தொண்டை போற்றியது. இறுதியில் காரியார் சிவலோகப் பதவி அடைந்தார். அன்று முதல் அவர் காரி நாயனார் என்று இவர் அழைக்கப்படுகிறார்.
“கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
- அம்பை சிவன்.
காண்க:
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக