நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

21.2.11

உலகப் பொதுமறை கண்ட தமிழர்

திருவள்ளுவர்

திருநட்சத்திரம்: மாசி - 9 -  ஹஸ்தம்
(பிப். 21)

''வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு'' என்று பாடி மகிழ்வார் மகாகவி பாரதி.

ஈரடிகளால் ஆனா குறட்பா வடிவில், 1330  பாக்களில், அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்கள் மூலமாக வீடு என்னும் உயரிய பேறினை அடைய வழிகாட்டுகிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் குறித்த ஆதாரப்பூர்வமான விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும், சென்னை- மயிலாப்பூரில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், மாசித் திங்கள், ஹஸ்தம் நட்சத்திரத்தில் அவர் அவதரித்தார் என்பது நம்பிக்கை. மயிலையிலுள்ள திருவள்ளுவர் கோயிலில் காணப்படும் குறிப்பு இது.

இவரது மனைவி பெயர் வாசுகி. குலம்: வள்ளுவர் குலம். மக்களுக்கு யானை  மீது  முரசறைந்து  நற்கருத்துக்களை  வெளிப்படுத்துவது  இவர்தம் குலத்தினரின்  பணியாக  இருந்ததாக  அறிகிறோம்.   இவர் சமயத்தால் சனாதன தர்மத்தை சார்ந்திருந்தவர் என்றும் சமணர் என்றும் வாதப் பிரதிவாதங்கள் உண்டு. ஆயினும் இவர்தம் குறளில் எங்கும் சமயம் சார்ந்த உபதேசங்கள் இல்லை. அதனாலேயே திருக்குறள் 'உலகப்பொதுமறை'  என்ற பெயர் பெற்றது. உலக மொழிகள் அதிகமானவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்நூல் என்ற பெருமை குறளுக்கு உண்டு.

திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் தை இரண்டாம் நாளை 'திருவள்ளுவர் தினம்' என்று தமிழக அரசு அறிவித்து கடைபிடிக்கிறது. இவரை திருவள்ளுவ நாயனார் என்று தமிழ் உலகம் ஏத்திப் புகழ்கிறது.

காண்க:
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக