-வ.மு.முரளி
திரிசிரபுரம் மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)
.
இன்று தமிழ் மொழிக்கு அணிகளாகக் கருதப்படும் பல காப்பியங்களை ஓலைச்சுவடிகளிலிருந்து நூல் வடிவுக்கு மாற்றியவர் ‘தமிழ்த் தாத்தா’ எனப்படும் உ.வே.சாமிநாதையர். அவர் மட்டும் பாடுபட்டு, தேடிக் கண்டறிந்து அவற்றைப் பதிப்பித்திருக்காவிடில் நமக்கு மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கிடைக்காமலே கரையானுக்கு உணவாகி இருக்கும். எனவேதான்,
“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய், அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே.”
-என்று மகாகவி பாரதி, உ.வே.சாமிநாதையரைப் போற்றுகிறார்.
ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித் தொகுத்து அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா. எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.