நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

12.2.11

ஆரிய சமாஜத்தின் நிறுவனர்

ஆரிய  சமாஜத்தின் சின்னம்

சுவாமி தயானந்த சரஸ்வதி
பிறப்பு: பிப். 12
 
இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் இறைவனைக் காணலாம் என்ற தத்துவத்தை உணர்த்திய மகரிஷி தயானந்த சரஸ்வதி, 1824 ஆம் ஆண்டில் சௌராஷ்டிரா மாநிலத்திலுள்ள டன்காரா என்ற கிராமத்தில் கர்சன் -தார்வாடி என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு மூலசங்கரர் என்ற பெயரிட்டனர் .
 
பிராமணக் குடும்பத்தைச் சார்ந்த மூலசங்கரரின் தந்தை பரம சிவபக்தி கொண்டவர் . குழந்தைப் பருவத்தை அதிகபட்சமாக இல்லத்தில் கழித்த மூலசங்கரருக்கு 21 ம் வயதில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது . ஆனால் குடும்ப வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிய மூலசங்கரர் திருமணம் அன்று வீட்டை விட்டு வெளியேறினார் . தன்னுடைய இரண்டாவது வாழ்க்கைக் காலகட்டத்தில், ஸ்வாமி நாராயண பிரம்மச்சாரி என்பவரால் நடத்தி வந்த ஆசிரமத்தில் சிஷ்யனாக சேர்ந்தார். அங்கு புரானந்த சரஸ்வதி என்ற குருவிடம் வாழ்க்கையின் யதார்த்தத்தை கற்றுக் கொண்டார் . அதிவேகமாக கிரகித்துக் கொள்ளும் திறனைப் பெற்ற மூலசங்கரரின் இந்த ஆற்றலை அறிந்துகொண்ட அவருடைய குரு அன்றிலிருந்து ஆசிரமத்தில் அவரை தயானந்த் சரஸ்வதி என்ற பெயரால் அழைத்தார் .

ஸ்வாமி விராஜ்நந்த குருவிடம் வேதங்களைக் கற்றுக் கொண்ட மகரிஷி தயாநந்த சரஸ்வதி காசிக்குச் சென்று வேதாங்கம் கல்வியிலும் தேர்ச்சி பெற்றார். சமஸ்கிருதம்,  ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் பேச்சுத் திறனைப் பெற்ற மகரிஷி தான் பெற்ற பக்தி மார்க்கத்தை மக்களோடு பகிர்ந்து கொண்டார் . தன்னுடைய வாழ்க்கையின் மூன்றாவது காலகட்டத்தில், அவர் கற்றுக் கொண்ட கல்வியையும், ஞானத்தையும் போதிக்கத் தொடங்கினார் . அந்தச் சமயத்தில் மக்களுடைய பொதுநலனை மனதில் வைத்துக் கொண்டு ஆரிய சமாஜத்தைத் துவக்கினார் .

முற்போக்கான எண்ணங்களைக் கொண்ட மகரிஷி தயானந்த் சரஸ்வதி, ஜோத்பூர் அரசரால் பல இன்னல்களைச் சந்தித்தார் . ஆனால் இடையூறுகளை சமாளித்தவண்ணம் மகரிஷி மனோதிடத்துடன் தன்னுடைய எண்ணங்களைப் பரப்புவதில் செயல்பட்டார் . 1883ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் திகதியன்று மகரிஷி தயானந்த் சரஸ்வதி காயத்ரி மந்திரத்தை ஜபித்த வண்ணம் சமாதி பெற்றார் . மகரிஷி வேதபாஷ்யா, பாஷ்ய பூமிகாசத்யார்த்த பிரகாஷ் ஆகிய நூல்களை இயற்றிய பெருமையைப் பெற்றார்.

காண்க: 
வேத சமயம் காக்க வந்தவர் 
. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக