நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

13.11.10

தமிழ் நாடகத் தந்தை
.


சங்கரதாஸ் சுவாமிகள்

நினைவுநாள்: நவ. 13

சங்கரதாஸ் சுவாமிகள் (1867 - 1922) 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்க வடிவம் பாடல் வடிவத்தோடு இணைத்து எழுதும் மரபில் உருபெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில் தான். தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுகிறார்.

சங்கரதாஸ் சுவாமிகள், திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அருகிலுள்ள காட்டுநாயக்கன்பட்டி என்ற சிற்றூரில் 7.9.1867ம் ஆண்டு பிறந்தார்.  பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் சங்கரன் என்பது. அது நாடக உலகில் சங்கரதாஸ் சுவாமிகளாக மாறிவிட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே தம் வாழ்நாளை வாழ்ந்து முடித்தார். தமிழ் இலக்கண, இலக்கியங்களில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். அதனாலேயே இவரது நாடகங்கள் மொழி வளம் பெற்றவையாகத் திகழ்ந்தன. 

சிறுவயதில் தம் தந்தையாரிடமும், பின்னர் பழனி தண்டபாணி சுவாமிகளிடமும் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். தம் 24ம் வயதில் முழுநேர நாடகக் கலைஞர் ஆனார். 
புராணக் கதைகளை நாடகமாக்கி, மக்களிடையே பக்தியைப் பரப்பிய சங்கரதாஸ் சுவாமிகள் 68 நாடகங்களை எழுதியவர். அவற்றில் இப்போது 18 நாடகங்களே கிடைத்திருக்கின்றன.

காண்க:
சங்கரதாஸ் சுவாமிகள்
தினமலர் செய்தி
திண்ணை கட்டுரை
தமிழ்வு கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக