நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

7.11.10

இந்திய நவீன விஞ்ஞானத்தின் தந்தைசர்.சி.வி.ராமன்
பிறந்த நாள்: நவ. 7

பாரதத்தின் இயற்பியல் மேதையான சந்திரசேகர் வெங்கட்ராமன்,  தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் 1888 , நவ. 7ல் பிறந்தவர். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார்.அதன் விளைவாக, சிதறும் ஒளியலைகளின் அலைநீள மாற்றத்திற்கு 'ராமன் விளைவு' என்று விஞ்ஞான உலகம் பெயரிட்டு மகிழ்ந்தது. இக்கண்டுபிடிப்பிற்காக ராமனுக்கு 1930- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு  வழங்கப்பட்டது.

ராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

வானம் பகலில் நீலமாகத்  தோன்ற ஒளிச் சிதறலே காரணம் என்று இவர் கண்டறிந்தார். 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் இவருக்கு 'சர்' பட்டம் அளிக்கப் பட்டது. உலகின் கௌரவத்திற்குரிய பல விருதுகளைப் பெற்ற ராமனுக்கு, இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.

விஞ்ஞான மேதை ச.வெ.ராமன். ராமன் பெங்களூரில் 1970 , நவ. 21ம் தேதி காலமானார். இந்தியாவின்   விஞ்ஞான வளர்ச்சிக்கு முன்னோடியாக விதையிட்டு, அதை விருத்தி செய்ய அநேக இளைஞர்களை விஞ்ஞானத்தில் உயர்த்திய  ச.வெ.ராமனை, 'இந்திய நவீன விஞ்ஞானத்தின் தந்தை' என்று உலகம் போற்றிப் புகழ்கிறது.

காண்க:
ச.வெ.ராமன்
C.V.Raman 
பாரத நாட்டின் பௌதிக மேதை - (திண்ணை)
சர்.சி.வி.ராமன் 
Biography
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக