நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

7.11.10

மனக்கோயில் அமைத்த மகான்

பூசலார் நாயனார்
திருநட்சத்திரம்: ஐப்பசி 21 - அனுஷம் (நவ.7)


ஈசன் மீதான பக்தியின் வெளிப்பாடாக, மனத்திலேயே கோயில்  அமைத்தவர் பூசலார் நாயனார்; 63 நாயன்மார்களுள் ஒருவர்;  தொண்டை நாட்டில் திருநின்றவூரிலே மறையவர் குலத்திலே தோன்றியவர். பெரும்கோயில் அமைக்க பெரும்பொருள் இல்லாதபோதும், இறைவன் மீதான ஆழ்ந்த பக்தியுடன் இவர் மனத்தின்கண் கற்பனையில் அமைத்த ஆலயத்தில் குடி புகுந்தான் ஈசன்- பல்லவ மன்னன் அமைத்த மாபெரும் கற்றளியில்  எழுந்தருளாமல். 

பக்தியுடன் ஆண்டவனை நோக்கி ஒருபடி முன்னே வைத்தால், ஆண்டவன் நம்மை நோக்கி பல படிகள் முன்னே வருவான் என்பதற்கு பூசலார் நாயனார் சரிதம் உதாரணம். திருநின்றவூரில் உள்ள இருதயாலீஸ்வரர் கோயிலில் பூசலாருக்கு கருவறையிலேயே சிவனுடன் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
.
காண்க:
பூசலார் நாயனார்
பூசலார் நாயனார் புராணம்
பெரியபுராணச் சொற்பொழிவு
இருதயாலீஸ்வரர் கோயில் (தினமலர்)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக