நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

28.6.16

ஓர் இனிய அழைப்பிதழ்தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில துணைத் தலைவரும், திருவையாறு பாரதி இலக்கியப் பயிலக இயக்குநருமான திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் 80-வது பிறந்த நாள் விழாவும்  அவரது இரு நூல்களின் வெளியீட்டு விழாவும் இணைந்து 03.07.2016, ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.30 மணியளவில் திருவையாறு சரஸ்வதி அம்மாள் தொடக்கப் பள்ளியில் கொண்டாடப்பட உள்ளன.

விழா அழைப்பிதழ் இத்துடன் உள்ளது. அனைவரும் வருக!

அழைப்பிதழின் மீது சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்...


அன்னாருக்கு  தேசிய சிந்தனைக் கழகத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

.


1 கருத்து:

ஆலாஸ்யம். கோ. சொன்னது…

அருமை!
"கற்றாரைக் கற்றாரேக் காமுறுவர்"

கருத்துரையிடுக