நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

19.6.16

தேசமும் தேகமும்

-திருநின்றவூர் ரவிக்குமார்

சிந்தனைக்களம்


தேசமென்றால்  நம் பாரத மணித்திருநாடு. அதில் பிறந்து வாழ்ச்சி பெற தர்ம சாதனமான தேகத்தை ஸ்ரீமந் நாராயணன் கருணையுடன் நமக்கு அளித்துள்ளான். வழிகாட்டியாக தர்ம சாத்திரங்களைத் தந்தருளினான்.

ஆனால் இங்கு தேகம் என்பது பகவான் உவந்து எழுந்தருளியுள்ள அர்ச்சாஸ்தலமாகிய திவ்யதேசம். தேகம் என்பது ஞானமும் ஞானத்தினால் பக்குவம் பெற்ற பக்தியும் உடைய சம்சாரியுடைய உடம்பு.


பகவான் ஜீவனை அனுபவிக்கிறான். பகவான் அனுபவிப்பவன். ஜீவன் அனுபவிக்கப்படுவது. பகவான் செய்யும் அனுபவத்திற்கு தடையாக ஜீவன் எதையும் பற்ற கூடாது. அவனுக்கு நாம் போக்கியமாக அமைய வேண்டும். மற்றொருவனுக்கு நாம் போக்கியமாக அமைவதோ அல்லது மற்றொன்றை நாம் போக்கியமாக கொள்வதோ கூடாது என்பர் பெரியோர்.

இதையே,
உண்ணி எழந்த என் தடமுலைகள்மானுடருக்கு பேச்சுப் படில்வாழக்கில்லேன் கண்டாய்....
-என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.

பகவானிடத்தில் பக்தனான ஞானி பெண்டுபிள்ளைகளையோ சொத்துக்களையோ பிராத்திக்கக்கூடாது என்று பெரியோர் கூறக்கேட்டிப்போம். வைணவ சித்தாந்தத்தின்படி இப்படி பிராத்திப்பது தவறில்லை என்று கூறலாம்.

பகவான் பக்தனை விரும்புகிறார். பக்தன் பகவானை விரும்புகிறான்.இங்கு கவனிக்க வேண்டியது, பகவத் சொரூபம் (உண்மை தன்மை ) வேறு. பகவத் ரூபம் (வடிவம் ) வேறு. அதே போல் ஜீவ சொரூபம் வேறு. ஜீவ சரீரம் வேறு.

ஞானிகளான ஆழ்வார்கள் பரமாத்ம சொரூபத்தைக் காட்டிலும் பகவத் விக்கிரகத்திலேயே ஆழக்கால் பட்டிருந்தனர். பகவானும் ஆழ்வார்களின் ஆத்ம சொரூபத்தைக் காட்டிலும் அவர்களது திருமேனியையே விரும்புவான்.
பச்சை மாமலை போல்மேனி
பவளவாய் கமலச் செங்கண்அச்சுதா அமரர் ஏறே என்னும்என்னும் இச்சுவை தவிர யான்போய்.....,.......அச்சுவை பெரினும் வேண்டேன்...
-என்று ஆழ்வார் பகவத் ரூபமான அர்ச்சையில் ஆழ்கிறார்.
"பொய் கலவாது என் மெய் கலந்தானே"
"மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை"
"பனிக்கடலில்.....,.....விட்டு ஓடி வந்து
என் மனக்கடலில் வாழவல்ல
மாய மணாள நம்பீ"
-என்று பகவான் ஜீவனுடைய இதய வாசத்தை விரும்பி அதற்காகவே திவ்ய தேசங்களில் எழந்தருளி உள்ளான் என்பது ஆழ்வார்கள் வாக்கால் தெளிவாகிறது.

மீண்டும் முதல் பத்திக்குச் செல்வோம்.

தேசத்திற்காக தேகத்தை விடுதல் நல்லதுதான். ஆனால் தேசத்திற்காகவே வாழ்வது அதனினும் மேலானது என்று கூறுகிறார் டாக்டர் கேசவ  பலிராம் ஹெட்கேவார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக