நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

5.1.13

தி ஹிந்து பத்திரிகையின் தேவையற்ற வம்பிழுப்பு


 
 விடுதலைப் போராட்டக் காலத்தில் துவங்கப்பட்ட பாரம்பரியச் சிறப்பு மிக்க  பத்திரிகையான 'தி ஹிண்டு', பல அற்புதமான இதழியல் பணிகளுக்கு முன்னுதாரணமானது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அநதப் பத்திரிகையின் தடம்புரளல் அதன்  வாசகர்களை   மிகவும் வருந்தச் செய்திருக்கிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஊதுகுழலாகவும் சீனாவின் அடிவருடியாகவும் தேசிய நலனுக்கு  எதிராக எழுதுவதே தி ஹிண்டுவின் பாதையாக மாறி இருக்கிறது. இதற்கு அதன் முன்னாள் ஆசிரியர் என்.ராம் முக்கியமான காரணம். அண்மையில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர்  குழுவில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பிறகு, அதன்பிறகு, தி ஹிண்டு மாறும் என்ற  எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதன் பாதை தொடர்ந்து தடம்  புரண்டு வருகிறது.

இதற்கு மிக  முக்கியமான உதாரணம் தான், அண்மையில் சஞ்சய் ஸ்ரீவத்சவா என்ற  பேராசிரியர் எழுதிய கட்டுரை. 'Taking the aggression out of masculinity'  என்ற அந்தக் கட்டுரையில் இந்தியாவில் நிகழும் கற்பழிப்பு, பாலியல் வன்முறை போன்ற சமூக களங்கங்களுக்கு நாட்டில் நிலவும் ஆண்மைய ஆதிக்க  உணர்வும்,  ஆண்   என்றால் ஆண்மையின் வடிவம் என்ற கருத்துருவாக்கமும் தான் காரணம் என்று கூறி இருக்கிறார். அத்துடன் நிறுத்தி இருந்தால் அவரது எழுத்தின் பின்புலம் நமக்கு தெரியாமல் போயிருக்கும்.

ஜனவரி 3 ம் தேதி வெளியான 'Taking the aggression out of masculinity' என்ற அந்தக் கட்டுரையில், ஆடவரை பெண்கள் வணங்கும் பண்பாடு இந்தியாவில் ஊறிப் போயிருப்பதற்கு 'கார்வ் பண்டிகை'யை முன்வைத்த சஞ்சய், ஆண்மையின் (masculinity) இலக்கணமாக ஆண்கள் முன்னிறுத்தப்படுவதே  பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கு காரணம் என்ற தனது  மிகப் பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார். இதற்கு அவர் உதாரணமாகக் காட்டியது சுவாமி விவேகானந்தர் என்பது தான் வம்பான  விஷயம்.

சுவாமி விவேகானந்தரின் வீரம் ததும்பும்  தோற்றம் நமது சமுதாயத்தில் உள்ள -ஆண்மைத்தனத்தின்  (அதாவது பெண்களை மதிக்காத தன்மையின் என்று புரிந்து கொள்ளவும்) அடையாளம் என்று சஞ்சய் குறிப்பிட்டிருக்கிறார் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது எப்படி என்பதை  தி ஹிண்டு பத்திரிகையிடமும் தான் கற்க வேண்டும்.

அடிமைப்பட்ட தேசத்தில் நாட்டு மக்களுக்கு நாம் யார் என்பதைப் புரியச் செய்த சுவாமி விவேகானந்தரை, நாடு இளைஞர்களின் எழுச்சி நாயகனாகக் கொண்டாடுகிறது. இளைஞர்கள் என்றால் ஆண்கள் மட்டுமல்ல, இளைஞிகளுக்கும் அவர் தான் ஆதர்ஷ புருஷர். ஆனால்தி ஹிண்டு பத்திரிகைஅவரது 150 வது பிறந்ததின ஆண்டுவிழா கொண்டாடப்படும் தருணத்தில் வேண்டுமென்றே களங்கப்படுத்தி இருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கருத்து சுதந்திரம் என்பது, என்னவாயினும் எழுதக் கொடுக்கப்பட்ட உரிமையல்ல என்பதை தி ஹிண்டு பத்திரிகைக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தி ஹிண்டு பத்திரிகை அவ்வப்போது இவ்வாறு ஹிந்து அடையாளங்களையும் தேசிய அடையாளங்களையும்  அவமதித்து குதூகலிப்பது வழக்கமே.  ஆயினும், மகாத்மா காந்தி முதல், நாட்டின் எண்ணற்ற தலைவர்களுக்கு ஒளிவிளக்காக வழிகாட்டிய சுவாமி விவேகானந்தரையும் வம்புக்கு இழுத்திருப்பது யாரும் எதிர்பாராதது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதையாக தி ஹிண்டுவின்  அன்னிய அடிவருடித்தனம் எல்லை கடந்திருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு  கிளம்பி  இருக்கிறது.

தமிழகத்தில் கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இந்த கழிசடைப் பத்திரிகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஹிந்து இயக்கங்களும் விவேகானந்த பக்தர்களும் இதில் முன்னணி  வகித்திருக்கின்றனர்; பல இடங்களில் தி ஹிண்டு பத்திரிகை எரிப்பு போராட்டம் நடைபெற்றிருக்கிறது. சென்னையில் நாளை ( 06.12.2012) காலை, அண்ணா  சாலையில்  உள்ள தி ஹிண்டு தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று அதன் ஆசிரியரிடம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய விவேகானந்த பக்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு நமது நன்றி.

மிக சாதுவான இலக்குகளை தாக்குவதே ஆங்கில இதழியல் அறமாக நமது நாட்டில் மாறிவிட்டிருக்கிறது. இந்த கபட வேடதாரிகளின் முன்னோடியான தி ஹிண்டு பத்திரிகை - திருவாளர் கஸ்தூரி ஐயங்கார் உள்ளிட்ட தனது முன்னோர்கள் வகுத்துத் தந்த பாதையை மறந்து- தேச விரோதமான செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவது கவலை அளிக்கிறது. ஒரு வாசகன் என்ற முறையிலும், நாட்டின் குடிமகன் என்ற முறையிலும், தி ஹிண்டு பத்திரிகையின் இந்த நயவஞ்சக கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

தன்னுனர்வுள்ள, விழிப்பான வாசகனே இதழியலின் அடிப்படை. அந்த வகையில் தி ஹிண்டு பத்திரிகை தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்த இடுகையின் மூலமாக தேசிய சிந்தனைக் கழகம்  வேண்டுகோள் விடுக்கிறது. நமது வழிகாட்டிகளை இகழ்ந்துவிட்டு நாம் பெறுவது எந்த லாபமும் இல்லை. இது உச்சாணி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் வேலை. இந்த முட்டாள்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம்!

'
தி ஹிண்டு' என்ற பெயரில் ஹிந்து விரோதமாகவே செயல்படும் அதன் உரிமையாளர்களுக்கு நல்ல புத்தி வர அந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தான் அருள் புரிய வேண்டும்.
  
-குழலேந்தி 
காண்க:  

1. 
'Taking theaggression out of masculinity' - Sanjai Srivastava (The Hindu -03.01.2013) http://www.thehindu.com/opinion/op-ed/taking-the-aggression-out-of-masculinity/article4266007.ece


.


4 கருத்துகள்:

Jayakumar Chandrasekaran சொன்னது…

You have omitted one. Anti tamil activity of "The Hindu" by supporting Srilanka and its president. Include that also.

V.KRISHNAMURTHY சொன்னது…

MY LETTER TO THE EDITOR OF THE HINDU:

Dear Sir,

This is with reference to the OP-ED titled "TAKING THE AGRESSION OUT OF MASCULINITY" by SANJAY SRIVASTAVA. I do not know what Swami Vivekananda's photo has got to do with this article on "Taking the aggression out of masculinity". Perhaps the author is ignorant of the famous speeches of Swami in America both during the World Conference of Religions and after. He addressed the people as "Brothers and sisters of America", and was applauded for the sincerity with which he said this. He had also said in his speeches, quite pungently too, how we, as Hindus treat all women except our wife as "mother", which those in the west treat all women other than their mother as "wives". To equate such a person with this article on aggression of masculinity is utter nonsense and has deeply hurt thousands of Swami's devotees like me. The Hindu and the author of this article owe an apology to all the readers. Hope an old institution like The Hindu will respect the sentiments of the people.

REGARDS,

V.KRISHNAMURTHY,

Unknown சொன்னது…

neethiyade

தேசமேதெய்வம் சொன்னது…தி ஹிண்டு பத்திரிகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: 200 பேர் கைது.

தி ஹிண்டு பத்திரிகை அலுலகம் முன்பு ஏற்கனவே திட்டமிட்டபடி காலை 9.30 மணியளவில் விவேகானந்த அன்பர்கள் குழுமினர். பிறகு, சுவாமி விவேகானந்தர் குறித்த ‘தி ஹிண்டு’ பத்திரிகையின் அவதூறு கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் திரு. ராம.நம்பி நாராயணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சென்னை- சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவர் என்று தெரிகிறது.

முன்னதாக, தி ஹிண்டு அலுவலகம் வந்த மனிதவளத் துறை துணைத் தலைவர் திரு. ஸ்ரீதரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். சுவாமி விவேகானந்தரை அவதூறு செய்யும் விதமாக வெளியிட்ட கட்டுரைக்கு பத்திரிகையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து நிர்வாகத்திடம் சொல்வதாக அவர் கூறினார்.

ஹிந்து இயக்க உறுப்பினர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

-குழலேந்தி

கருத்துரையிடுக