நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

11.1.13

'விவேகானந்தம்150.காம்' துவக்கம்



பிரியமான
சகோதர, சகோதரிகளுக்கு, 

வணக்கம்!

நமது பாரத தேசத்தின் பெருமைகளையும் பாரம்பரியமான நமது கலாச்சாரத்தின் உயர்வினையும் உலகுக்கு அறிவித்த சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு விழாவை ஒட்டி, தேசிய சிந்தனைக் கழகம், விவேகானந்தம் 150.காம் என்ற இணைய தளத்தைத் துவங்கி உள்ளது. 

சுவாமி விவேகானந்தரின் பன்முகப் பரிமாணங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் வண்ணம், தினசரி இந்தத் தளத்தில் படைப்புகள் வெளியாகும். 

தவிர, நாடு  முழுவதும் நடைபெற உள்ள விவேகானந்தர் 150-வது ஆண்டுவிழா குறித்த முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய தொகுப்புகளும் இத்தளத்தில் இடம்பெறும். 

இந்தத் தளம், விவேகானந்தரின் 150-வது ஆண்டு விழா தருணத்தில் நாங்கள் சமர்ப்பிக்கும் நறுமலர்களைத் தொடுத்த  மாலையாக மணம் பரப்பும் என்று கருதுகிறோம். 

இத்தளத்துக்கு தங்களது  ஆதரவினையும் ஒத்துழைப்பையும் அன்புடன் எதிர்பார்க்கிறோம். 

 வணக்கம்! வந்தே மாதரம்! 

புதிய இணையதளத்தின் முகவரி: www.vivekanandam150.com

என்றும் தேசியப் பணியில்,

ம.கொ.சி.ராஜேந்திரன்.
மாநில அமைபாளர்,
தேசிய சிந்தனைக் கழகம் 
சென்னை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக