நாட்டைக் காப்போம்!
நாடு இன்றுள்ள மோசமான ஊழல் மலிந்த, கறை படிந்த சூழலை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம்!
நாட்டின் ஒருமைப்பாடு பல மாநிலங்களில் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம்!
நாட்டின் அனைத்து மக்களும் அடிப்படைத் தேவைகளைப் பெற்றிட, அனைவருக்கும் சமச்சீரான வாழ்க்கை கிட்டிட, நாம் இன்று சபதம் ஏற்போம்!
சுயநலம் மிகுந்த அரசியல்வாதிகளின் கெடுமதியால் நாடு சீரழியாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் பணி புரிவோம்!
நாடு என்பது நாமே என்று உணர்வோம்! உணர்த்துவோம்! நமது நாட்டை நாமே காப்போம்!
-குடியரசு தின உறுதிமொழி
கார்ட்டூன்: மதி
நன்றி: தினமணி (26.01.2011)
காண்க: காஷ்மீரில் தேசியக்கொடி: சில சிந்தனைகள்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக