முனையடுவார் நாயனார்
திருநட்சத்திரம்:
பங்குனி - 29 - பூசம்
(ஏப். 12)
சோழநாட்டில் உள்ள திருநீடுர் என்னும் ஊரில் சிவனடியார் ஒருவர் இருந்தார். இவர் வேளாள குலத்தைச் சார்ந்தவர். முனை என்றால் போர்முனை என்று பொருள். இவர், போர்க்களத்தில் நின்று எதிரிகளை வெல்வதில் வல்லவர். எனவே இவரை, 'முனையடுவார்' என்றே அழைத்தனர்.
சிவபெருமானிடத்தில் மாறாத காதல் கொண்டு உள்ளம் உருக, கண்ணீர் மல்க வழிபடுவார். சிவனடியார்களுக்கு திருத்தொண்டுகள் புரிந்து வந்தார்.
போரிலே எதிரிகளிடம் தோற்றவர்கள் முனையடுவாரிடம் வருவர். அவருடைய உதவியை கேட்பர். முனையடுவார், தோல்வியடைந்தவர்கள் சார்பாக போரிட்டு வெற்றி பெறுவார். அந்த வெற்றியில் கிடைக்கும் பொருளைக் கொண்டு சிவனடியார்களுக்கு உணவு ஏற்பாடு செய்து படைப்பார்.
அடியார்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வார். இவ்வாறு பல காலம் வாழ்ந்து சிவனடியார்களுக்கு தொண்டு செய்து மகிழ்ந்தார். இறுதியில் சிவபெருமான் திருவடிகளை அடைந்தார்.
அன்றுமுதல் இவர் முனையடுவார் நாயனார் என அழைக்கப்படுகிறார்.
-அம்பை சிவன்
காண்க:
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக