மகாத்மா காந்தி
பலிதானம்: ஜன. 30 (1948)
- வாழ்க நீ! எம்மான், இந்த
- வையத்து நாட்டி லெல்லாம்
- தாழ்வுற்று வறுமை மிஞ்சி
- விடுதலை தவறிக் கெட்டுப்
- பாழ்பட்டு நின்ற தாமோர்
- பாரத தேசந் தன்னை
- வாழ்விக்க வந்த காந்தி
- மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!
- அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார்
- விடுதலை யார்ந்து, செல்வம்
- குடிமையி லுயர்வு, கல்வி
- ஞானமும் கூடி யோங்கிப்
- படிமிசைத் தலைமை யெய்தும்
- படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
- முடிவிலாக் கீர்த்தி பெற்றாய,
- புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!
- கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
- மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
- இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ?
- என்சொலிப் புகழ்வதிங் குனையே?
- விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
- வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
- படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்
- படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்!
- தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
- பிறனுயிர் தன்னையும் கணித்தல்
- மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
- கடவுளின் மக்களென் றுணர்தல்
- இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
- இழிபடு போர், கொலை, தண்டம்
- பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
- பிணைத்திடத் துணிந்தனை பெருமான்!
- பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
- அதனி லுந் திறன்பெரி துடைத்தாம்
- அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
- அறவழி யென்று நீ அறிந்தாய்
- நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை!
- நெறியினால் இந்தியா விற்கு
- வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
- வையகம் வாழ்கநல் லறத்தே!
-மகாகவி பாரதி
காண்க:
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக