நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

7.7.11

சம உரிமைக்கான முதல்குரல்

 
இரட்டைமலை சீனிவாசன் 
 
(பிறப்பு: ஜூன் 7) 
 
தீண்டாமையைவிட மிகப் பெரிய கொடுமை உலகத்தில் இல்லை. இக்கொடுமையை நம் நாட்டில் அனுபவித்துவந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தன்னுணர்வு ஏற்படுத்தியும், தீண்டாமைக்கு எதிராகப் போராடியும் பாடுபட்ட உத்தமர்களுள் தலையாயவர் தமிழகத்தின் இரட்டைமலை சீனிவாசன். 140  ஆண்டுகளுக்கு முன்னரே சம உரிமைக்காக  கிளர்ந்தெழுந்த   முதல் குரல் இவருடையது. இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுபடவும் சமத்துவத்தை நோக்கிப் பயணிக்கவும் இவரது முயற்ச்சிகளுக்கு பெரும் பங்குண்டு.
 
காஞ்சிபுரம் மாவட்டம், கோழியாலம் கிராமத்தில் 1859-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி பிறந்தார் சீனிவாசன். பள்ளிப் பருவத்தில் இருந்தே தீண்டாமை கொடுமைக்கு ஆளானார். சொந்த ஊரிலும், தஞ்சாவூரிலும் பள்ளிப் படிப்பை முடித்து கோவையில் கல்லூரி படிப்பை முடித்தார்.
 

 இனப் போராளியாகவும், வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தனது சமுதாய மக்கள் அனுபவிக்கும் வேதனைகளில் இருந்து அவர்களை விடுவிக்க பாடுபட்டார்.  1891-ம் ஆண்டு "பறையர் மகாஜன சபை' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.
 

 பின்னர், இந்த அமைப்பு "ஆதிதிராவிட மகாஜன சபை' என்று அழைக்கப்பட்டது. இந்தச் சபை மூலம் ஆதிதிராவிட மக்கள் சமுதாய முன்னேற்றம் அடைய பாடுபட்டார். பின்னர், 1893-ம் ஆண்டு "பறையர்' என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.  இந்தப் பத்திரிகை தாழ்த்தப்பட்ட இன மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில், தொடர் கட்டுரைகளை எழுதினார்.
 

 வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்பு:  1926-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ராவ்சாகிப் பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஜூன் 1-ம் தேதி அவருக்கு அந்தப் பட்டம் கொடுக்கப்பட்டது. 1930 ஜூன் 6-ம் தேதி திவான் பகதூர் பட்டமும், திராவிட மணி என்கிற பட்டமும் அளிக்கப்பட்டன.
 

 மோ.க.காந்தி என்று காந்தியடிகள் தமிழில் கையெழுத்து போடுவதற்குக் காரணமாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன். தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் வழக்கறிஞராக இருந்த போது நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றினார்.
 

 1930-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் சார்பில் சட்ட மேதை அம்பேத்கருடன் கலந்து கொண்டார். மகாத்மாவால் தொடங்கப்பட்ட தீண்டத் தகாதோர் ஊழியர் சங்கத்தில் ஊழியராக இருந்தார்.
 

 மேலும், 1939-ம் ஆண்டு அம்பேத்கருடன் சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பைத் தொடங்கினார். தனது வாழ்க்கையைத் ஆதி திராவிட மக்களுக்காக அர்ப்பணித்தார். 1945-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி தனது 89-வது வயதில் காலமானார்.
 
வாழ்நாள் முழுவதும் தான் சார்ந்த சமுதாயத்தின் இழிநிலையைப் போக்கப் போராடிய சமூக சீர்திருத்தச் செம்மலான இரட்டைமலை சீனிவாசன், என்றும் நம் நன்றிக்குரியவர்.
 
தகவல் உதவி: தினமணி
 
காண்க:
 
 
 
 
 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக