நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

4.3.11

அறப்பணியாற்றிய சிலந்தியின் மறுபிறவி


கோச்செங்கட் சோழ நாயனார்

திருநட்சத்திரம்: மாசி - 20 - சதயம்

(மார்ச் 4)

சோழநாட்டின் காவிரிக் கரையில் 'சந்திர தீர்த்தம்' என்றொரு தீர்த்தம் உள்ளது. அதனருகில் இருந்த காட்டில் வெண்ணாவல் மரம் ஒன்று இருந்தது. அதனடியில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. ஒரு யானை அதனைக் கண்டது.

அந்த யானை துதிக்கையால் நீரை எடுத்து வந்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும். மலர்கள் எடுத்து அர்ச்சித்து வழிபடும். இவ்வாறு நாள்தோறும் அந்த யானை சிவலிங்கத்தை வழிபட்டு வந்ததால் அந்த இடத்திற்கு 'திருவானைக்கா' என்ற பெயர் ஏற்பட்டது.

அந்த நாவல் மரத்தில் ஒரு சிலந்தியும் வசித்து வந்தது. சிவலிங்கத்தின் மீது காய்ந்த சருகுகள் விழுவதைக் கண்டது. உடனே அந்த சிலந்தி தனது எச்சில் மூலம் சிவலிங்கத்தின் மேல் வலைபின்னஅது பந்தல் போன்று அமைந்தது. பூஜை செய்ய வந்த யானை, சிவலிங்கத்தின் மேல் சிலந்தி வலை இருப்பதைக் கண்டது. உடனே அதை அகற்றியது. பின்பு, தனது பூஜையை செய்துவிட்டு  சென்றது.

இதுபோல் தினமும் சிலந்தி பந்தல் அமைக்க, யானை அதை அகற்றியது. இதனால் கோபமான சிலந்தி மறுநாள் யானையின் துதிக்கைக்குள் புகுந்து கடித்தது. வலியால் யானை நிலத்திலே வீழ்ந்து துதிக்கையினை பூமியில் அடித்தது. சிலந்தியின் விஷத்தால் யானை இறந்தது. துதிக்கையின் உள்ளே புகுந்த சிலந்தியும் இறந்தது. உடனே சிவபெருமான் காட்சிதந்தார். யானைக்கு சிவபதவி அளித்தார். சிலந்திக்கு சோழர்  குலத்திலே பிறக்குமாறு அருள்புரிந்தார். இது புராணக்கதை.

சுபதேவர் என்னும் சோழ மன்னனுக்கும் கமலவதியார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கமலவதியாருக்கு பிள்ளைப்பேறு இல்லை. அதனால் அவர் தில்லைக்கூத்தனை வேண்டினார். இறைவன் அருளால் கமலவதியார் கருவுற்றார். அக்கருவில் திருவானைக்கா சிலந்தியின் ஆருயிர் சேர்ந்தது.

நாட்கள் உருண்டோடின, கமலவதியார் பிள்ளைபெறும் நேரம் வந்தது. ''பிள்ளை இப்பொழுது பிறக்காமல் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் மூவுலகையும் ஆள்வான்'' என்று ஜோதிடர்கள் சொன்னார்கள். இதைக் கேட்ட கமலவதியார், ''அப்படியானால் என்னைத் தலைகீழாகக் கட்டுங்கள்''  என்றார். அதன்படி அவரை தலைகீழாகக் கட்டவே, ஒரு நாழிகை கழித்து குழந்தை பிறந்தது.

காலந்தாழ்ந்து பிறந்ததால் குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. அதனால் அந்தக்  குழந்தையை 'செங்கண்ணன்' என்று அழைத்தனர். குழந்தை பிறந்தவுடன் கமலவதியார் இறந்துவிட்டார். சுபதேவர் பிள்ளையை வளர்த்தார். பின்னர் தக்க வயதில் முடி சூட்டினார்பின் தவநெறியில் நின்று இறைவனடி அடைந்தார்.

கோச்செங்கட் சோழருக்கு முன்ஜென்ம நினைவு இருந்தது.  அதனால் பல கோயில்கள் கட்டுவதில்  மும்முரமாக இருந்தார். பின்னர், அவர் தான் முன்ஜென்மத்தில் அருள் பெற்ற திருவானைக்காவைச் சென்றடைந்தார். அங்கு சென்றதும் திருக்கோயிலின் மதில்களை சீரமைத்தார்.

சோழநாட்டிலே பல திருக்கோயில்கள் கட்டினார். பின்னர் தில்லைக்குச் சென்றார். தில்லைக் கூத்தனை வழிபட்டு நின்றார். இவ்வாறு பல திருத்தொண்டுகள் செய்து இறுதியில், சிவபெருமான் திருவடிகளை அடைந்தார். இறைபணியால், 'கோச்செங்கட் சோழ நாயனார்' என இவர் அழைக்கப்படுகிறார்.

- அம்பை சிவன்
காண்க:









     கோச்செங்கணான் யார்? (தேவர் தளம்)



.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக