நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

23.3.11

புரட்சியின் தளகர்த்தர்கள்


பகத்சிங், சுகதேவ், ராஜகுரு

பலிதானம்: மார்ச் 23


''கவர்னர் அவர்களே,  பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக நாங்கள் யுத்தம் தொடுத்தோம் என்று குற்றம் சாட்டி எங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அதை நாங்கள் பெருமையோடு ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால், யுத்தக் கைதிகளான எங்களை ராணுவ முறைப்படி போவீரர்களைக் கொண்டு சுட்டுக் கொல்வதுதானே நியாயம்?  தூக்கிலிட்டுக் கொல்வது நியாயமற்றது. ஆகவே ராணுவ வீரர்களை அனுப்பி எங்களை சுட்டுக் கொல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்''.

- தங்கள்
பகத்சிங்
(1931, மார்ச் 3)

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் மரணத்திற்குக் காரணமான ஆங்கிலேய அதிகாரி சாண்டர்சை சுட்டுக் கொன்றது தொடர்பான இரண்டாவது லாகூர் சதி வழக்கிலும், டில்லி சட்டசபையில் குண்டுவீசி பிரிட்டீஷ் அரசைக் கவிழ்க்க முயன்ற  வழக்கிலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய புரட்சி நாயகர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர், ஆங்கில  அதிகாரிக்கு    தியாகி பகத்சிங் எழுதிய கடிதம் இது.

(ஆதாரம்: சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் - பக்: 310 ;    சிவலை இளமதி- அலைகள் வெளியீட்டகம், சென்னை)

சாகும் தறுவாயிலும் என்னே துணிவு? இதுவல்லவா பராக்கிரமம்? ஆயினும், இவரது வேண்டுகோள் ஏற்கப்படாமல்,  தூக்கிலிடப்பட்டனர்  மூவரும்
(1931, மார்ச் 23).  இத்தகைய தியாகியரால் அல்லவா நாம் சுதந்திரம் பெற்றுள்ளோம்! இன்று அவர்களது நினைவுநாளில், நமது தேசத்தின் தற்போதைய இழிநிலை குறித்து சற்றேனும் சிந்திப்போம்!

காண்க:
.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக