முந்தைய சென்னை ராஜதானி மாகாணத்தின் சட்டசபையில் 1937-ஆம் ஆண்டு ராஜாஜி பிரதமராக இருந்தபோது மதுவிலக்குச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அந்த அரசு ஆட்சியிலிருந்து விலகியது. தொடர்ந்து 1944 ஜனவரி முதல் தேதியிலிருந்து மீண்டும் கள்ளுக்கடைகளைத் திறப்பது என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது.
நமது இலக்கு
அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.
நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.
காண்க:
நமது நோக்கம்
நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.
காண்க:
நமது நோக்கம்
4.10.14
அரசே சாராயம் விற்கலாமா?
Labels:
குழலேந்தி,
சிந்தனைக் களம்
2.10.14
காந்திஜி கண்ட சத்தியாக்கிரகம்!
-லா.சு.ரங்கராஜன்
‘உண்மையில் காந்தியிசம்' (காந்தியம்) என்றால் என்ன என்று எனக்கே தெரியாது. நாட்டிற்கு நான் புதிதாக ஏதும் வழங்கவில்லை. இந்தியாவின் பாரம்பரியம் மிக்க மெய்யறிவுக்கு ஒரு புது வடிவம் அளித்துள்ளேன். அவ்வளவு தான். ஆகவே, அதனை காந்தியம் என்று கூறுவது தவறு' - என்று 1940 பிப்ரவரி 20 அன்று மலிகண்டா (வங்க மாகாணம்)வில் காதி கண்காட்சியைத் திறந்துவைத்து ஆற்றிய உரையில் மகாத்மா காந்தி தன்னடக்கத்துடன் கூறியுள்ளார்.
11.9.14
ஆச்சார்ய தேவோ பவ!
-சு.சத்தியநாராயணன்
சிந்தனைக்களம்
திருப்பூர் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி பள்ளிகள் சங்கமும் திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் மற்றும் திருப்பூர் நிட் சிட்டி அரிமா சங்கமும் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் தினவிழாவில் (செப். 5), திருப்பூர் அறம் அறக்கட்டளையின் நிர்வாகிகளுள் ஒருவரான திரு.சு.சத்தியநாராயணன் ஆற்றிய உரை இது...
Labels:
சிந்தனைக் களம்,
சு.சத்தியநாராயணன்
23.7.14
இப்படியும் இருந்தார்கள்...
![]() |
| கோபிநாத் பர்தோலாய் (06.06.1890 - 05.08.1950) |
ஆகஸ்ட் 5, 1950. அப்போது பிரிக்கப்படாத அசாம் மாநில முதல்வர் கோபிநாத் பர்தோலாய் 60-ம் வயதில் திடீரென உயிர் நீத்தார். மாநில ஆளுநர் ஜயராம்தாஸ் தௌலத்ராம் துக்கம் விசாரிக்க அவரது வீட்டிற்குச் சென்றார்.
கட்டிட வேலைகள் பாதியிலேயே நிற்கின்ற வீடு. பர்தோலாய்க்கு ஐந்து மகள்கள். நான்கு மகன்கள். மூத்த இரு மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மீதமுள்ள மகள்களும் கடைசி மகனைத் தவிர மற்ற மகன்களும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்றுகொண்டிருந்தார்கள். கடைசி மகன் இனிமேல்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஒரு விதவைத் தங்கையும் மற்ற மூன்று சகோதரர்களும் ஒன்றாக வசிக்கும் கூட்டுக் குடும்பம். பர்தோலாய் இறக்கும்போது அவரிடம் எந்தவிதச் சேமிப்பும் இல்லை. துக்கம் விசாரிக்க வந்த ஆளுநர் மெதுவாகத் துக்கத்தில் ஆழ்ந்திருந்த சகோதரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட தகவல் இது. அவரது இறுதிச் சடங்குகளுக்குக்கூடப் போதிய பணம் இல்லாத நிலை.
Labels:
அரசியல் தலைவர்கள்,
சிந்தனைக் களம்,
பாரத ரத்னா
25.6.14
தொழிற்சங்க இயக்க வழிகாட்டி
![]() |
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
(பிறப்பு: 1902, அக். 11 - மறைவு: 1979, அக். 8)
|
ஜெயப்பிரகாஷ் நாராயண் பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்திலுள்ள சிடப்பியாரா என்ற சிற்றூரில் எளிய குடும்பத்தில் 11.10.1902இல் பிறந்தவர். படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை, சிற்றுண்டி சாலையில் பாத்திரங்களை கழுவி, அதன் வருவாயை வைத்து கல்வி கற்றவர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


