நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

15.12.14

ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் எது?




2014 ஜூலை மாதம் 24, 25-ம் தேதிகளில் மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் பேரரசராக முடிசூடிய ஆயிரமாவது ஆண்டையும், அவர் பிறந்த ஆடி மாதத்துத் திருவாதிரை நாளையும் ‘கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்’ மிகச் சிறப்பாகக் கொண்டாடி உலகத் தமிழ் மக்களையும் வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தையும் கங்கை கொண்ட சோழ புரத்தின்பால் ஈர்த்தனர்.

விழா நடந்து முடிந்த பிறகு, சில வரலாற்று ஆர்வலர்கள் ‘சோழர் வரலாறு’என்ற நூலை எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும், ‘பிற்காலச் சோழர் வரலாறு’ என்ற நூலை எழுதிய சதாசிவப் பண்டாரத்தாரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மார்கழி மாதத்து ஆதிரை என்று கூறியிருக்கும்போது, இவர்கள் எப்படி ஆடி மாதத்துத் திருவாதிரை நாளை அவருடைய பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடலாம் எனக் குற்றம் கூறுவதோடு, அது வரலாற்றுப் பிழை என்றும் சாட முற்பட்டுள்ளனர்.

வரலாறு என்பது எழுதி முடிக்கப்பெற்ற ஒன்று அல்ல. இந்தியத் தொல்லியல் துறையால் படி எடுத்துப் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டுகள் அத்தனையும் இதுவரை அச்சில் வெளிவரவில்லை. மேலும், ஆண்டுதோறும் பல நூற்றுக் கணக்கான கல்வெட்டுச் சாசனங்களும் சில செப்பேட்டுச் சாசனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கின்றன. புதிய தரவுகள் கிடைக்கும்போது பழைய கருத்துக்களும் முடிவுகளும் நிச்சயம் மாற்றம் பெறும்.

19.11.14

வினோபா பாவே - காந்தியம் உருவாக்கிய அதிசயம்

- பி.ஏ.கிருஷ்ணன்



 வினோபா பாவே மறைந்த தினம்: 15 நவம்பர், 1982 
 
லட்சக் கணக்கான எளிய மக்களின் வாழ்க்கை ஓரளவு சீரடைந்திருப்பதற்கு வினோபாவும் ஒரு காரணம். 

“விமானங்களும் மற்றைய போக்குவரத்துச் சாதனங்களும் தேவைதான். ஆனால், மனிதனுக்குக் கால்கள்தான் முக்கியம்.” இதைச் சொன்னவர் சொன்னதோடு நின்றுவிடவில்லை, 14 ஆண்டுகளில் 70,000 கிலோ மீட்டர் நடந்தார். நடந்ததோடு நின்றுவிடவில்லை. இந்தியாவின் கிராமங்கள்தோறும் சென்று, 42 லட்சம் ஏக்கர் நிலத்தை நிலவுடைமையாளர்களிடமிருந்து பெற்று, நிலம் இல்லாதவர்களுக்கு வாங்கித் தந்தார்.

21.10.14

பட்டாசு வெடிப்போம் வாருங்கள்!




பட்டாசு வெடிப்போம் வாருங்கள் - தீய
பயங்கரவாதம் ஒழியட்டும்!
மத்தாப்பு கொளுத்திட வாருங்கள் - உலகில்
மகிழ்ச்சியே எங்கும் நிறையட்டும்!  
(பட்டாசு)

15.10.14

காந்திஜி காண விரும்பிய 'தூய்மை இந்தியா'!

-லா.சு.ரங்கராஜன்

“எனது பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவிப்பது கடுந்தண்டனைக்குரிய குற்றமென விதி வகுக்கப்பட வேண்டும். முனைப்புடன் நூல் நூற்றல் அல்லது வேறு ஏதாகிலும் தேசப்பணி புரிதல் மட்டுமே அன்று அனுசரிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.  அன்றைய தினம் முழுவதையும் நற்பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஆட்டம் பாட்டம் கிஞ்சித்தும் வேண்டாம்”.

 - இவ்வாறு மகாத்மா காந்தி தமது ‘அரிஜன்’ (15.10.1938) இதழில் எழுதினார்.

10.10.14

தமிழமுது பருக வாருங்கள்!







 திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
200-வது ஜெயந்தி சொற்பொழிவு 


அன்பு சகோதரர்களுக்கு வணக்கம்!    

 தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில்  ஒருவரான ‘மகாவித்வான்‘ திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் 200-வது பிறந்த ஆண்டையொட்டி,  நமது  தேசிய சிந்தனைக் கழகம்  சொற்பொழிவு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 

கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரலின்படி நடைபெறும்  இந்நிகழ்வில் தாங்களும் தங்கள் நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். 


                                 நிகழ்ச்சி நிரல் 

நாள்  :  ஸ்ரீ  ஜய  வருஷம்,  புரட்டாசி 25
              (12.10.2014)  ஞாயிற்றுக்கிழமை.
நேரம் :  மாலை  05.30 மணி.
இடம்  :  12, எம்.வி.நாயுடு தெரு, 
                 சேத்துப்பட்டு (அஞ்சல் ) 
                பழைய  ஆர்.டி .ஓ. அலுவலகம்  அருகில்,   
                சென்னை-31.

உரை:  பேராசிரியர்  ம. வே. பசுபதி  அவர்கள் 
               முதல்வர் (பணிநிறைவு),   
               திருப்பனந்தாள்  தமிழ்க்  கல்லூரி. 


அனைவரையும்  நிகழ்ச்சிக்கு  அகமகிழ்வுடன்   அழைக்கின்றோம்!  

.