நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

25.9.11

சான்றோர் வாக்கு

தீன தயாள் உபாத்யாய
(பிறப்பு: செப். 25)
 
முதலாளித்துவம், கம்யூனிசம் ஆகிய இரு முறைகளுமே, பரிபூரண மனிதன், அவனது முழுமையான தன்மை, அவனது அபிலாஷைகள் ஆகியவற்றைகருத்தில் கொள்ளத் தவறிவிட்டன. அவனை பணத்திற்காக பறக்கும் சுயநலவாதியாக கருதுகிறது ஒன்று; மற்றொன்றோ, கடுமையான விதிகளால் கட்டுப்படுத்தினால் ஒழிய எந்த நல்லதும் செய்ய தகுதியற்றவனாக அவனை நோக்குகிறது. பொருளாதார, அரசியல் அதிகாரக்குவிப்பு, இரண்டிலுமே பொதிந்துள்ளது. எனவே, இரண்டுமே மனிதனை மனிதத் தன்மை இழக்கும்படிச் செய்கிறது.



-பண்டித தீனதயாள் உபாத்யாய.
(ஏகாத்ம மானவ வாதம்- பக்: 91)

காண்க:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக