இயற்பகை நாயனார்
திரு நட்சத்திரம்:
மார்கழி - 12 - உத்திரம்
(டிச.27)
(டிச.27)
காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் உதித்தவர் இயற்பகையார். சிவனடியார் எது விரும்பினாலும் இல்லை என மறுக்காமல் தந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இல்லறத்தின் நற்பயன் சிவனடியாரை காப்பதே என்பது அவரது வாழ்வின் தெளிவாக இருந்தது.
அவரை சோதிக்க விரும்பிய ஈசன், வேதியர் வேடம் தாங்கி அவரது வீட்டிற்கு வந்தார். தான் என்ன கேட்டாலும் தர வேண்டும் என்று கோரி, இயற்கையாரின் மனைவியை தம்முடன் அனுப்புமாறு கேட்டார். இதுகேட்டு சிறிதும் தயங்கவில்லை, இயற்பகையார். அதன் படியே தம் மனைவியை சிவனடியார் வடிவில் வந்த ஈசனுடன் அனுப்பி வைத்தார். அவரது மனையாளும் கணவனின் சிவா கைங்கர்யத்திற்கு எதிர்ப்பேச்சு பேசாமல் சிவனடியாருடன் சென்றார்.
அவர்களுக்கு மற்றவர்களால் இடையூறு நேரா வண்ணம் தாமே காவலாக வாளேந்தியும் வந்தார். இதுகண்டு சீற்றமடைந்து தன்னை எதிர்த்த சுற்றத்தாருடன் போரிட்டு அவர்களை விரட்டினார். இதன்மூலம் இயற்பகையாரின் சிவபக்தியை உலகிற்கு உணர்த்திய ஈசன், நாடகத்தின் இறுதியில் அவருக்கு காட்சி தந்து ''பல்லாண்டு காலம் இல்லறத்தை நல்லறமாக நடத்தி இறுதியில் எம்மை வந்தடைவாய்'' என வரமளித்து மறைந்தார். இயற்பகையார் அவ்வண்ணமே வாழ்ந்து இறுதியில் ஈசன் கழலினை அடைந்தார்.
ஈசனின் அடியாருக்கு சேவை செய்ய தனது மனைவியையே தானம் அளித்த இயற்பகையார், பக்தியின் உச்சநிலைக்கு உதாரணமாகத் திகழ்கிறார். இதன்மூலம், நாயன்மார்களில் ஒருவராக இயற்பகையார் உயர்வு பெற்றார். பக்தர்களுக்கு இறைவன் அளிக்கும் சோதனைகள் அவர்களது வைராக்கிய உள்ளத்தைப் பரிசோதிக்கவே என்பதையே இயற்பகையாரின் வாழ்க்கை காட்டுகிறது. காண்க:
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக