நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.

இத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.

இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

நமது பயணம் என்றும் தொடரும்

தேசிய சிந்தனை

தேசமே தெய்வம் (புதிய தளம்)
5.12.10

விடுதலையின் குரல்


மகரிஷி அரவிந்தர்
நினைவு நாள்: டிச. 5 (1950)

எந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில் கடந்தகாலம் குறித்த பெருமிதம்,  நிகழ்காலம் குறித்த வேதனை, எதிர்காலம்   குறித்த   பொற்கனவுகள் நிறைந்துள்ளதோ, அந்த தேசமே முன்னேற்றமடையும்.

-மகரிஷி அரவிந்தர்

காண்க:கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக