பெரியார்
ஈ.வே.ராமசாமி
நினைவு: டிச. 24
பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ.வெ. ராமசாமி, (செப். 17, 1879 - டிச. 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றவை. இவரது பேச்சுக்களும் எழுத்துக்களும் பல தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.
இம் மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையே, அந்த மூடநம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கை, கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்ற கருதுகோளை முன்வைத்து, ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். ஆரிய- திராவிட பேதத்தை அரசியல் கருவி ஆக்கியவர் இவரே. இன்றும் தமிழகத்தின் அரசியலில் திராவிட வாதம் பேரிடம் வகிக்கிறது.
அவர் தமிழ்ச் சமூகத்திற்காக செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக் கிடந்த சாதிய வேறுபாடுகளை குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு பெரியார் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளார்.
இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பலத் தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவரது கருத்துக்கள் சர்சைக்குரியவையாக இருப்பினும், ஏற்க இயலாதவை என்றாலும், தமிழகத்தின் வரலாற்றில் பெரியாரின் பங்களிப்பு புறக்கணிக்க இயலாதது.
நாட்டு ஒற்றுமைக்கு வித்திட்ட காங்கிரஸ் கட்சியில் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய இவர் இறுதிக்காலத்தில் நாட்டு ஒற்றுமைக்கு எதிராக முழங்கியதை காலத்தின் கோலம் என்றுதான் கொள்ளவேண்டும்.
தீண்டாமைக்கு எதிரான இவரது வைக்கம் போராட்டம், மதுவிலக்கு போராட்டங்கள் புகழ் பெற்றவை. தள்ளாடும் வயதிலும் கிராமம் கிராமமாகச் சென்று பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பியவர் பெரியார். ஹிந்து மதம் குறித்த அவரது கருத்துக்கள் பலரது உள்ளத்தைப் புண்படுத்துபவை என்றாலும், கொள்கைக்காக இறுதிவரை வாழ்ந்தவர் அவர் என்பதை மறுக்க முடியாது.
காண்க
ஈ.வெ.ராமசாமி (விக்கி)
பெரியார் ஈ.வெ.ரா
தமிழ்ப் பெரியார்கள்- ஈ.வெ.ரா
பெரியாரின் மறுபக்கம்
PERIYAR E.V.RAMASAMY
About Periyar
1 கருத்து:
தோற்றுப் போனவா்.தனது கொள்கைகளுக்கு முரணாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவா்.ஏட்டிக்குப் போட்டி என்று விதண்டாவாதம் பேசி அனைவாின் வெறுப்புக்கு ஆளானவா்.
ஆனால் கேரளத்தில் பிறந்த ஸ்ரீநாராயணகுரு அருமையான சீா்திருத்தம் செய்தாா்.சமயத்தை பொதுவுடைமை ஆக்கினாா். தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான சமய கல்வியை வழங்கி அவர்களை பிறாமணா்களாக்கினாா்.ஏற்பட்டது முன்னேற்றம்.
கருத்துரையிடுக