நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.

இத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.

இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

நமது பயணம் என்றும் தொடரும்

தேசிய சிந்தனை

தேசமே தெய்வம் (புதிய தளம்)
7.12.10

சிவனுக்காக சூதாடியவர்

மூர்க்க நாயனார்
திருநட்சத்திரம்:
கார்த்திகை - 21 - மூலம்
(டிச. 7) 

திருவேற்காடு தலத்தில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் மூர்க்க நாயனார். ஈசனின் அடியார்களுக்கு உணவளிக்கும் தொண்டினைப் புரிந்து வந்தார். அந்த திருப்பணியால் அவர் செல்வமெல்லாம் கரைந்தது. அதற்காக அவர் சூதாட்டங்களில் கலந்து கொண்டு அதில் வரும் வருமானத்தில் அன்னதானம் செய்தார். அவரை எதிர்ப்பவர்களை வாளால் வெட்டிச் சாய்ப்பார். அதனால் அவர் மூர்க்கன் எனும் பெயரும் பெற்றார். 

சூதாட்டத்தில் சமர்த்தராகத் திகழ்ந்ததால் நற்சூதர் என்றும், சுந்தரரால், ‘கற்ற சூதர்’ என்றும் அழைக்கப்பட்டார். சிவனடியார்கள் உண்டபிறகு கடைசியிலேயே உணவு உண்ணும் பழக்கத்தை வைத்திருந்தார். வாழ்நாள் முழுதும் சிவத் தொண்டிலேயே கழித்த மூர்க்கர் இறுதியில் கும்பகோணத்தில் ஈசனுடன் இரண்டறக் கலந்தார்.
 

.
“மூர்க்கற்கும் அடியேன்”  என்று  திருத்தொண்டத்தொகை இவரைப் புகழ்ந்து பாடுகிறது. இறை பக்தியின் மூர்க்க வடிவமாக மூர்க்க நாயனார் கருதப்படுகிறார். இறைவனுக்கு பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற பேதம் கிடையாது; உண்மையான பக்தியே தேவை என்பதே மூர்க்க நாயனார் கூறும் உண்மை.
நன்றி: தினகரன்

காண்க:
மூர்க்க நாயனார் (விக்கி)
மூர்க்க நாயனார் புராணம்
தமிழ்க் களஞ்சியம்
மூர்க்க நாயனார் அவதாரத் தலம் (தினமலர்)
பெரிய புராணச் சொற்பொழிவு
அன்பே சிவம்
Moorga  Nayanar 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக