நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

8.12.10

அடியாரில் சிவனைக் கண்டவர்

சிறப்புலி நாயனார் 
திருநட்சத்திரம்: கார்த்திகை- 22 - பூராடம் 
(டிச.8)

தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் வாழ்ந்தவர் சிறப்புலியார். எப்போதும் நீறு பூசி ஐந்தெழுத்தை ஓதுவதே தம் கடமையாகக் கொண்டிருந்தார். வேதமந்திரங்களால் யாகம் புரிவார். சிவனடியார்களை தன் வீட்டிற்கு எழுந்தருளச் செய்து மலர்ந்த முகத்துடன் வரவேற்று அறுசுவை உணவளித்து மகிழ்வார். சிவனடியார்கள் விரும்பும் எதையும் தந்து இல்லை என்று கூறாமல் வாழ்நாள் முழுதும் திருப்பணிகள் செய்து இறுதியில் சிவனடி இணைந்தார்.
“சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்”  என்று இவரை திருத்தொண்டத் தொகை பாடுகிறது. சிவனடியார்க்குச் செய்யும் சேவை சிவனுக்கே செய்யும் சேவையாகிறது என்பதை சிறப்புலியார் வாழ்வு நமக்கு காட்டுகிறது.


காண்க:
சிறப்புலி நாயனார் (விக்கி)
சிறப்புலி நாயனார் புராணம்
தமிழ்க் களஞ்சியம்
பெரிய புராணச் சொற்பொழிவு
Chirappuli Nayanaar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக