நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.

இத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.

இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

நமது பயணம் என்றும் தொடரும்

தேசிய சிந்தனை

தேசமே தெய்வம் (புதிய தளம்)
8.2.11

மனைவியின் கரமறுத்த சிவபக்தர்

கலிக்கம்ப நாயனார் 
திருநட்சத்திரம்: தை - 25 - ரேவதி 
(பிப். 8)

நடுநாட்டில் வளங்கள் சிறந்த பழம்பதி திருப்பெண்ணாடகம் என்னும் ஊரில் வணிகர் குலத்தில் அவதரித்தவர் கலிக்கம்ப நாயனார். அவர் அப்பதியில் தூங்கனை மாடத் திருக்கோயில் எழுந்தருளிய சிவக்கொழுந்து நாதருடைய திருத்தொண்டிலேயே பணிசெய்து வந்தனர்.  சிவன் அடியார்களுக்கு  விதிப்படி இனிய திருவமுதினை இன்பம் பொருந்த அளித்து வந்தார்.
சிவனடியாரில் திருவடிகளுக்கு நீர் ஊற்றி வரவேற்பது அக்கால மரபு. அதன்படி,  ஒருநாள் திருவமுது உண்ணவந்த அடியார்களின் திருவடிகளை மனைவியார் நீர் வார்க்கத் தாம் விளக்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது முன்னர் தம் ஏவலாளராய் இருந்து ஏவலை வெறுத்து சென்ற ஒருவர், சிவனடியாரது திருவேடத்துடன் வந்தார்.
அவரது திருவடியில் நீரூற்ற களிக்கம்பரின் மனைவியார் தயங்கினார்.  “இவர் முன்பு ஏவல் செய்யாது அகன்றவர் போலும்” என்று தயங்கினார். நாயனார் மனைவியாரைப் பார்த்தார்; அவரது கருத்தை அறிந்தார்; நீர்க்கரகத்தை (தண்ணிச் செம்பு) வாங்கிக்கொண்டு அம்மனைவியாரது கையை வாளினால் வெட்டினார்.
அடியார் திருவடியைத் தாமே விளக்கி அமுதூட்டுவதற்கு வேண்டிய ஏனைய செயல்களை எல்லாம் தாமே செய்து சலனமில்லாத சிந்தையுடன் அவர்களுக்குத் திருவமுதூட்டினார். இவ்வாறு பல நாள் சிவதொண்டாற்றித் திருவடிநீழலை அடைந்தார்.
இக்கதை சற்று உயர்வு நவிற்சியாகவும் கேலிக்குரியதாகவும் தோன்றலாம். ஏவலராக இருந்தவரேனும் சிவனடியார் வேடத்தில் வந்தவரை சிவனாகவே கருதிய உன்மத்த நிலையில் கலிக்கம்பர், தன்  மனைவியின் கரத்தை வெட்டவும் தயங்கவில்லை என்பதே இக்கதை சொல்லும் கருத்து. சிவபக்தியின் உச்சத்திற்கு கலிக்கம்ப நாயனார் மற்றோர் உதாரணம்.

காண்க: 
.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக