நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

20.2.11

ஆம்! பாரதம் உலகிற்கு வழிகாட்டும்!


 "கடன் வாங்கினால் திருப்பிச்  செலுத்த வேண்டும் என்ற நாணயம் இந்தியர்களிடம் இருப்பதும், கடன் கொடுத்தால் அதை ஒழுங்காக திரும்ப வசூலிக்க வேண்டும் என்ற முனைப்பு வங்கியில் பணியாற்றும்  அதிகாரிகளிடம் இருப்பதும்தான் இந்தியாவில் உள்ள வங்கிகளின் 'வெற்றிகரமான செயல்பாட்டிற்க்குக் காரணம்'  என்ற முத்தாய்ப்பு வரிகளுடன் பன்னாட்டு செலாவணி நிதியத்திடம் (IMF) சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

              2008ம் ஆண்டுக்கு  முந்தைய காலத்தில் உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள நிதி நிறுவனங்கள் கடுமையான பொருளாதார சரிவைச் சந்தித்த பொழுது அதை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட சுயேச்சையான அமைப்பு ஒன்றே தனது அறிக்கையில் மேற்கண்டவாறு பாரத தேசத்தை பாராட்டியிருக்கிறது.   

             மேலும், ''இந்தியர்கள் கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவிடும் பழக்கம் இல்லாதவர்கள். நல்ல நிலையிலும், நெருக்கடியான நிலையிலும் கூட தங்களால் முடிந்த அளவிற்கு சேமிப்பவர்கள். எனவே வெளிநாடுகளிலிருந்து தான் முதலீடு பெற வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் இந்திய தொழில் நிறுவனங்களால் உள்நாட்டிலேயே தங்களது தேவையான அளவு முதலீட்டை திரட்ட முடிந்தது.

             வீட்டுக் கடன், பயிர்க் கடன், வாகனக் கடன் போன்றவற்றையும் தகுந்த ஆய்வுகளுக்கு பிறகே, கடன் வாங்குகிறவர் திருப்பி செலுத்தும் அளவிற்கு, பொருளாதார வசதி படைத்தவர்,  நாணயமானவர் என்று உறுதியாக தெரிந்த பிறகு கடன் வழங்கப்பட்டது. அதனால் கடன்கள் ஒழுங்காக வசூல் ஆகின.

             விவசாயிகளால் கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டபோது அரசு வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடன்களை அரசே திருப்பிச்  செலுத்தியதால் வங்கிகள் பெருத்த நஷ்டத்திலிருந்து பாதுகாத்துக்  கொண்டன.

            இந்த வகையிலேயே நிதித்துறை எந்த விதமான நெருக்கடியிலும் சிக்காமல் மீளவும் பொருளாதார சவால்களை சந்திக்க முடிந்தது" என்று அந்த அறிக்கை தொடர்கிறது.

            "அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பொருளாதார நெருக்கடிகளினால் திவாலான வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் சரிக்கட்ட எடுத்த நடவடிக்கைகளில் பலவற்றை,  இந்தியா ஏற்கனவே அந்த நிறுவனங்கள் நல்ல நிலையில் இருந்த போதே எடுத்ததால் அவற்றின் நிலைமை மேலும் மேலும் வலுவடைந்தது" என்று, அதற்காக இந்திய வங்கி அதிகாரிகளையும், ரிசர்வ்  வங்கியின் அப்போதைய கவர்னரான ஒய்.வி.ரெட்டியையும் ஐ.எம்.எப்.  மனம் திறந்து பாராட்டுகிறது.

           உலகெங்கும் பொருளாதார வீழ்ச்சி அடைந்து உற்பத்தி, வேலைவாய்ப்பு போன்ற பொருளாதாரச்  சரிவுகளைச்  சந்தித்த பொழுது இந்தியாவில் மட்டும் நாட்டின் சமயத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக இருந்ததை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

           இதிலிருந்தே இந்தியர்களின் நிதி நிர்வாகம், நிதி நிலைமை பற்றிய கண்ணோட்டம் ஆகியவை சிறந்தது என்பதும் அவற்றை பிற நாடுகளும் பின்பற்றவேண்டும் என்பதும் தெரிகிறது" என்று ஐ.எம்,எப். ஆல் நியமிக்கப்பட்ட அந்த சுயேச்சையான அமைப்பின் அறிக்கையில் தனது வியப்பை பதிவு செய்கிறது.

           "சிறுகக் கட்டி பெருக வாழ்" என்றும் "சிறுதுளி பெருவெள்ளம்" என்றும் பாரத தேசத்தில் சேமிப்பின் உயர்வை பழமொழிகள் சுட்டிக்காட்டுகின்றன.

           உலகில் மிகச் சிறந்த பண்பாட்டையும், கலாசாரத்தையும் கொண்ட பாரதம் என்னும் இந்தியா  இன்று உலகிற்கே பொருளாதார நெருக்கடிக்கு வழிகாட்டியிருக்கிறது.

           மகாகவி பாரதியின் வழிகளான " ஆம்! பாரதம் உலகிற்கே வழிகாட்டும்!''  என்ற வைர வரிகள் பாரதீயர்களாகிய நம்மை பெருமிதம் கொள்ள செய்வதோடு தலை நிமிர செய்யவும் வைக்கிறது.

           பொருளாதாரம் மட்டுமல்ல தற்போது உலகம் சந்தித்து வரும் சவால்களான பயங்கரவாதம், போர்கள், இயற்கைச்  சீரழிவு, வறுமை போன்ற எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண பாரதம் தான்,  பாரதமே உலகிற்கு வழிகாட்டும்.  

-ம.கொ.சி.ராஜேந்திரன்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக