அன்னை
சாரதா தேவி
பிறப்பு: டிச. 22
காண்க:
காண்க:
அன்னை சாரதா தேவி, ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி. இருவரும் துறவறம் பூண்டு நல்லறம் நடத்தினர். ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின், விதவைக் கோலம் ஏற்க அன்னை முற்பட்டார். அப்போது காட்சி தந்த ராமகிருஷ்ணர், "ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குத்தான் சென்றுள்ளேன்" என்று கூறினார். சாரதாதேவி மன ஆறுதல் அடைந்தார். தவிர, கடைசிவரை விதவைக் கோலத்தைத் தவிர்த்தார்.
அன்னையின் இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்ருந்த வேளை, காய்ச்சல் வந்து உடல்நிலை மோசமானது. அப்போதும்கூட தன்னைப் பார்க்க வந்த ஒரு பக்தைக்கு, " உனக்கு அமைதி வேண்டுமென்றால், மற்றவர்களின் குறைகளைப் பார்க்காதே. அதற்கு பதிலாக, உன்னிடம் இருக்கும் குற்றங்களைப் பார். இந்த உலகம் முழுவதும் உன்னுடைய சொத்தாக ஆக்கிக்கொள்ளக் கற்றுக்கொள். மகளே, இந்த உலகில் யாரும் அந்நியர் இல்லை. உலகம் முழுவதும் உன் சொத்துக்ள்!" என்று கூறி ஆசி வழங்கினார். இதுதான் அன்னை சொன்ன கடைசி உபதேசம்.
ராமகிருஷ்ணர் என்னும் ஆன்மிக சூரியனின் நிழலாய் வாழ்ந்தவர் அன்னை சாரதா தேவி. இல்லறத்தாலும் இறைவனை அடைய முடியும் என்று காட்டிய முன்னோடி தம்பதியர் இவர்கள். சுவாமி விவேகானந்தர் என்னும் ஆன்மிக சிங்கத்தை உலகிற்கு வழங்கிய மகான்கள் இவர்கள்.
அன்னையின் பிறந்த தினம்: 1853, டிச. 22.
அன்னையின் நினைவு தினம்: 1920 , ஜூலை 20
காண்க:
அன்னை சாரதா தேவி (ஈகரை)
சாரதையின் பொன்மொழிகள்
சாரதாமணி மா
Sarada Devi
THE HOLY MOTHER
Sri Sarada Devi
1 கருத்து:
வணக்கம்,மனதிற்க்கினிய வலைப்பக்கத்தை கண்டறிந்ததில் மகிழ்ச்சி. எப்படி உங்களை இணையத்தில் தொடர்வது?
கருத்துரையிடுக