நாள்: புரட்டாசி-31
வழிப்பறி செய்த வேடன் ஒருவன் ராம மந்திரத்தால் மகத்தான முனிவராகி, உலகுக்கே நல்வழி காட்டும் ராமாயண காவியத்தை எழுதினார். அவர் தான் வால்மீகி முனிவர். இன்று அவரது அவதார ஜெயந்தி தினம்.
நாரதரின் வழிகாட்டுதலால் 'மரா மரா' என்ற சொல்லையே பல்லாயிரம் முறை ஜபித்ததன் வாயிலாக, அறியாமலே 'ராமராம' மந்திரம் ஜபித்ததன் பலனை அடைந்தவர் வால்மீகி. தவத்தின் போது கரையான் புற்று மூடியதும்கூடத் தெரியாத வைராக்கிய சித்தராக அவர் இருந்ததன் பலன், இறையருள் அவர்மீது பொழிந்தது.
பூர்வாசிரமத்தில் தனது குடும்பத்திற்காக வேட்டை ஆடியும் வழிப்பறி செய்தும் வாழ்ந்த வால்மீகி, இறைவன் அருளால் மனம் திருந்தி, ரகுகுல வீரனின் சரிதத்தை அற்புதமான சந்தங்களுடன் கூடிய 24000 பாடல்களுடன் 6 காண்டங்களாக ராமாயண இதிகாசமாக வழங்கினார். எவருடைய பிறப்பும் தாழ்ந்ததல்ல என்று காட்டுகிறது வால்மீகி முனிவரின் சரிதம். இறைவன் அருள் இருந்தால் யாராலும் மாபெரும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு வால்மீகி முனிவர் உதாரணம். எனவே தான் வால்மீகி 'ஆதிகவி' என்று அழைக்கப்படுகிறார்.
முழு விபரங்களுக்கு: வால்மீகி காண்க: வழிப்பறி செய்த வால்மீகி
காண்க: வால்மீகி கோயில், திருவான்மியூர்
காண்க: வால்மீகி ஆசிரமங்கள்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக