நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

3.3.11

அறம் கூறும் சிறுகதைகள்


சிந்தனைக்களம்  

அறமே உலக நியதி. சமஸ்கிருதத்தில் தர்மம் என்றும் தமிழில் அறமென்றும் கூறப்படும் ஒரு சொல்லுக்கு பல பொருளுண்டு. இந்த உலகை ஒரு கட்டுக்குள் வைப்பது அறம் தான். 'அறத்தை நாம் காக்க அறம் நம்மைக் காக்கும்' என்ற சம்ஸ்கிருத ஸ்லோகம் உண்டு.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் 'அறம்' குறித்து ஒரு பாலே எழுதி இருக்கிறார். 'அறத்தான் வருவதே  இன்பம்' என்பது திருவள்ளுவரின் பிரகடனம்.  'அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்'  என்று பிரகடனம் செய்கிறார் இளங்கோவடிகள்.  தமிழின் தொன்மையான இலக்கியங்கள் பலவும் அறம் வலியுறுத்துபவையே.

அந்த வரிசையில் நவீனத் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன், தனது இணையதளத்தில் அறம் போற்றும் கதைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். இவை அனைத்தும் உண்மையான நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் புனையப்பட்ட கதைகள் என்பதால், படிக்கும்போது கூடவே வாழ்வது போன்ற எண்ணம் ஏற்படுகிறது.

ஓலைச்சிலுவை
மெல்லிய நூல்
பெருவலி 
- மேற்கண்ட சிறுகதைகள் அனைத்துமே  வாழ்வின் துயரங்களை மீறி, தனிநபர்களின் நற்குணங்களால் மானுடம் மேன்மையுறுவதைச்  சித்தரிப்பவை. அந்த வகையில் மானுட மேம்பாட்டிற்கு  உதவும் ஆக்கப்பூர்வமான சிறுகதைகள் இவை. இவற்றைப் படியுங்கள். ரசியுங்கள். கண்ணீரில் கரையுங்கள்.  மானுட சமுத்திரத்தில் நாமும் ஒரு துளி என்று உணருங்கள்.

-குழலேந்தி
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக