நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

23.8.11

ஜன லோக்பால் மசோதா கூறுவது என்ன?

இன்று நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் - ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி நடத்தப்படுவதாகும்.

இந்த சட்ட மசோதா ஏன் தேவை?
அரசு முன்வைக்கும் லோக்பால் மசோதாவுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
நாம் செய்ய வேண்டியது என்ன?

- இது குறித்து சிறு கையேட்டை, தேசிய சிந்தனைக் கழகத்தின் சகோதர அமைப்பான ஈரோட்டில் இயங்கும் பாரதி வாசகர் வட்டம் வெளியிட்டுள்ளது.

அதன் உள்ளடக்கம் இங்கு பட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்தையும் சொடுக்கி பெரிதுபடுத்திப் படிக்கலாம்.


இதனைத் தயாரித்த பாரதி வாசகர் வட்டத்துக்கும் அதன் செயலாளர் திரு. சு.சண்முகவேலுக்கும் நன்றி.
















18.8.11

ஹசாரே கரத்தை வலுப்படுத்துவோம்!

தேசிய சிந்தனைக் கழகம்
தமிழ்நாடு
5/3 , லேக் ஏரியா, மூன்றாவது வீதி, வள்ளுவர் கோட்டம் அருகில்,
நுங்கம்பாக்கம், சென்னை- 600 034. தொடர்புக்கு: 98423 08521

18.08.2011
 


அண்ணா ஹசாரேவை ஆதரிப்போம்!
ஊழலுக்கு விடை கொடுப்போம்!


    ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் இயற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்துவரும் சமூக சேவகர் அண்ணா ஹசாரேவுக்கு தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலக் குழு நன்றியும் வணக்கமும் தெரிவிக்கிறது. அவருடன் இப்பணியில் இணைந்து செயல்படும் தேசபக்தர்கள் அனைவருக்கும் இறைவன் மேலும் வலிமையை வழங்க தேசிய சிந்தனைக் கழகம் பிரார்த்திக்கிறது.

    சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத வகையில் ஊழல் பெருக்கெடுத்து நாட்டு மக்களை வேதனைப்படுத்தி வருகிறது. அமைச்சர்களே ஊழல்புகாரில் சிக்கி சிறைக்கு செல்லும் நிலையில், நாட்டு மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பிலுள்ள மத்திய அரசோ, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை மறைமுகமாகக் காத்து வருகிறது.

    இதற்கு மாற்றாக, பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அதிகாரிகளை கட்டுப்படுத்த வல்ல ‘லோக்பால் சட்டம்’ காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது. இச்சட்டம் மூலமாக ஊழல் கறை படியும் உயரதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் உடனடியாகத் தண்டிக்க முடியும் என்பதே, இதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

    இதற்கு, ‘லோக்பால் சட்டத்தில் பிரதமர் உள்ளிட்ட உயரதிகார பீடங்களையும் உட்படுத்துவதே தீர்வு’ என்று சமூக சேவகர் அண்ணா ஹசாரே கூறி வருகிறார். அவரது தலைமையிலான குழு உருவாக்கிய ஜன லோக்பால் சட்டத்தை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இது எதிர்பார்க்கப்பட்டதே.

    தனது கோரிக்கையை வலியுறுத்தி அண்ணா ஹசாரே ஆக. 16 முதல் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைத்த மத்திய அரசு, இப்போது அவரது போராட்டத்தை முனைமழுங்கச் செய்ய பல வகைகளில் முயன்று வருகிறது.

    மத்திய அரசின் தவறான செயல்பாடுகளை தேசிய சிந்தனைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அண்ணா ஹசாரே குழுவினர் மீது அவதூறு பிரசாரம் மேற்கொள்ளும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் கண்டிக்கிறோம்.

    மத்திய அரசு, தனது தவறுகளை இப்போதேனும் உணர்ந்து, ஹசாரேவை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். அவர் வலியுறுத்தும் வகையில், வலுவான, ஒட்டைகளற்ற லோக்பால் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஹசாரேவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திலும் நாடு நெடுகிலும் ஆதரவளித்த அரசியல் கட்சிகளும் பாராட்டிற்குரியவர்கள். ‘லோக்பால் சட்டம்’ விஷயத்தில் பிற அரசியல் கட்சிகளும் ஹசாரேவின் முயற்சிகளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று நாடே எதிர்பார்க்கிறது.

     ஹசாரே உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில் அவருக்கு ஆதரவான போராட்டங்களில் தேசிய சிந்தனைக் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது. இது தொடர்பாக, மாநிலம் முழுவதிலும் ஆங்காங்கு நடைபெறும் போராட்டங்களில் தே.சி.கழக உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.

    ஊழலுக்கு எதிரான ஹசாரே அவர்களின் போராட்டம் வெல்லட்டும்!

    பாரத அன்னை வெல்க!

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
ம.கொ.சி.ராஜேந்திரன்.
(மாநில அமைப்பாளர்)

காண்க:
 
 
 
.

16.8.11

ஆடி மாத மலர்கள்


ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:


(ஜூலை 20)


(ஆடி - 9 - கிருத்திகை)


(ஆடி - 9 - கிருத்திகை)


(ஆடி - 12 - திருவாதிரை)


(ஆடி - 17 - பூரம்)


(ஆக. 4)



(ஆடி - 20 - சித்திரை)



(ஆடி - 21 - சுவாதி)


(ஆடி - 21 - சுவாதி)
 

(ஆடி - 21 - கேட்டை)


(ஆடி - 21 - கேட்டை)


(ஆடி - 27 - உத்திராடம்)


(ஆடி - 27 - உத்திராடம்)


(மறைவு: ஆக. 16)


-----------------------------


சான்றோர் - மலர்வும் மறைவும்:


(மறைவு: ஜூலை 21)


(பிறப்பு: ஜூலை 30)
(மறைவு: ஜூலை 22)


(பிறப்பு: ஜூலை 23)
(மறைவு: ஆக.1)


(மறைவு: ஜூலை 23)


(பிறப்பு: ஜூலை 23)


(பிறப்பு: ஜூலை 27)


(பிறப்பு: ஜூலை 28)



(மறைவு: ஜூலை 29)


(பலிதானம்: ஜூலை 31)


(பலிதானம்: ஆடி 18)


(மறைவு: ஆக. 7)


(மறைவு: ஆக. 13)


(பிறப்பு: ஆக. 15)




---------------------------------

பிற:








அவதார புருஷர்


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
(மறைவு: ஆக. 16)
 
விவேகானந்தர் உட்பட பல சாதுக்களின் குருவாகவும், மெய்யறிவு பெற்ற ஞானியாகவும் விளங்கியவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் தட்சிணேசுவரத்தில் உள்ள காளி கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த காலம். அப்போது அவ்வாலயத்தின் நிர்வாகியாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு இருந்து வந்தார். அவர், பரமஹம்சரைக் கடவுள் அவதாரமாகவே கருதி வணங்கி வந்தார்.

ஒரு நாள் ராமகிருஷ்ணர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் தன் அறையில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே பரமஹம்சரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. நம்பமுடியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் மதுர்பாபு. ஆம், அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். மறுகோடிக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. பகவான் ராமகிருஷ்ணர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார். மதுர்பாபு அளவிலா ஆச்சரியம் அடைந்தார். தான் பார்ப்பது உண்மைதானா அல்லது கனவா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. அறைக்கு வெளியே வந்து மீண்டும் உற்றுப் பார்த்தார். அங்கே சிவனும் சக்தியும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தனர். பகவான் ராமகிருஷ்ணர் அங்கே சிவசக்தி சொரூபமாய்க் காட்சி அளித்தார்.

சற்று நேரம் கழித்து ராமகிருஷ்ணர் அறைக்குத் திரும்பியவுடன் தான் கண்ட காட்சியைப் பற்றி எடுத்துரைத்தார் மதுர்பாபு. குருதேவர் அதனை ‘ஆம்’ என்று ஒப்புக்கொள்ளவுமில்லை. ‘இல்லை’ என்று மறுக்கவுமில்லை. ‘எனக்கு ஏதும் தெரியாது!, எல்லாம் பகவான் செயல்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். தான் கண்ட உண்மையைப் பலரிடமும் கூறி ஆச்சர்யப்பட்டார் மதுர்பாபு.

‘ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்தவன் எவனோ, அவனே ராமகிருஷ்ணனாக வந்திருக்கிறான்!’ என்று விவேகானந்தருக்குத் தமது அவதார ரகசியத்தை வெளியிட்ட மகா புருஷர் அல்லவா அவர்.
 
 

15.8.11

வீறுடன் சபதம் ஏற்போம்!

அந்தமான் சிறைச்சாலை

அந்தமான் சிறையின் சுவர்களில்
காது வைத்துக் கேளுங்கள்...
அதில் அடைபட்டுக் கிடந்த
ஆன்மாக்களின் அழுகுரல் கேட்கும்.

செல்லுலார் அறைகளில்
நகத்தால் பிறாண்டி அவர்கள்
எழுதிய கண்ணீர் வரிகளைப்
பார்த்தாலே உப்புக் கரிக்கும்.
சிறைக் கம்பிகளில் தேய்ந்த
ரேகைகள் பளிச்சிடும்.

கோவை, பாளையங்கோட்டை,
அலிப்பூர், மாண்டலே...
சிறைகளின் பெயர்கள் நீளும்...
அந்த தவபூமிகளில் ஆகுதியான
வீர மறவரின் பெயர்கள்
காற்றில் எதிரொலிக்கும்.

தியாகியர் உடைத்த கற்களில்
கட்டப்பட்ட கருவூலகக்
கட்டடங்களில் அவர்களது
ரத்தவாடை வீசும்...
தேசம், தேசம் என்று
நேசமாய்ப் பேசும்.

அருங்காட்சியகத்திலுள்ள
செக்கில் இருந்து
வியர்வை வடியும்...
வெள்ளையன் வீசிய சாட்டையின்
வீறலில் மனம் வலிக்கும்.

நாட்டிற்காகப் போராடிய
அந்த அடிமைகளை
இன்றாவது நினையுங்கள்...
நடிகையின் நேர்காணலை
நீங்கள் ரசிப்பதற்காக
அடித்தளமானவர்கள் அவர்கள்.

நீங்கள் பார்க்கும்
நகைச்சுவை சேனலில்
விளம்பர இடைவேளை
விடும் போதேனும்,
அவர்களை நினையுங்கள்.

வருங்காலத் தலைமுறைக்காக
உன்மத்தமாகப் போராடிய தியாகிகளை
சில நொடியேனும்
உண்மையாக நினையுங்கள்...

அப்போது,
அவர்களது அழுகுரலும்
ரத்தவாடையும்
வியர்வையும்
கண்ணீர்த் துளிகளும்
யாருக்காக எனப் புரியும்.

- வ.மு.முரளி
 
 
அனைவருக்கும் 
இனிய 65-வது 
சுதந்திரதின வாழ்த்துக்கள்!