நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

21.4.11

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவள்
கவிதை

என் சின்னச் சின்ன அசைவுகளுக்குக்  கூட
ஓடி வருகிறாய் நீ.

குளிக்கச் சென்றால் நீர் பிடித்து வைக்கிறாய்.
அல்லது  நீராய் வருகிறாய்.

தலை துவட்டிவிட்டு
காய்ச்சல் தவிர்க்கிறாய்.

தலையை வாரிவிட்டு
கன்னம் கிள்ளுகிறாய்.

மின்விசிறியை சுழலவிட்டபோதும்
என் வியர்வையைத் துடைக்கிறாய்.

என் ஒற்றைப் புன்னகைக்காக
ஓராயிரம் செய்கிறாய் நீ.

உன் அன்பிற்காக ஏங்கும்
இந்த ஏழையின் சிரிப்பில்
இறைவனை நாளும் காண்கிறாய் நீ.

- ஆதலையூர் சூரியகுமார்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக