நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

14.11.10

சிறைப்படிப்பு

கவிதை
இன்று (நவ. 14 ) குழந்தைகள் தினம்

காலை எழுந்தவுடன் டியூஷன் - பின்பு
கழுத்தை அறுக்கும் அந்த ஸ்கூல்!
மாலை வந்தவுடன் ஹோம்ஒர்க் - எனக்கு
மனதில் மகிழ்ச்சி இல்லை தாத்தா!

சிவப்பு மிஸ்ஸு வந்தா இந்தி...
கறுப்பு மிஸ்ஸு வந்தா கணக்கு!
குண்டு மிஸ்ஸு வந்தா கிள்ளு - இந்தச்
சிறையில் படிப்பெதற்குச் சொல்லு தாத்தா?

துள்ளித் திரிய வந்த என்னை -பள்ளிக்குத்
தூக்கிப் போக வருகிறாள் அன்னை!
பூட்டியிருக்கும் இந்த 'கேட்'டைத் தாண்டி
ஓடப் போகிறேன் தாத்தா!
-ஆதலையூர் சூரியகுமார் 
(தொடர்பு எல்லைக்கு வெளியே- கவிதை நூலிலிருந்து; பக்: 13)  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக