நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

17.10.10

வீர இளைஞனுக்கு


கவிதை



அச்சம் விலக்கு
நீ
அடுத்த தலைமுறையின் ஒளிவிளக்கு.

மகிழ்ச்சியின் மந்திரங்களை
மனதுக்குள் விதை.
நீ
விருட்சம் உறங்கிக் கொண்டிருக்கும்
விதை.

நட்சத்திரங்களைக் கனவு கான்.
மின்மினிகளிடம்
சரணடைந்துவிடாதே.

ஓய்வின்றி உழைத்துப் பார்.
நிதம்.
உன் கைகளில்தான்
இனி பாரதம்.

- ஆதலையூர்  சூரியகுமார்.
..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக